பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சிவாஜி வெங்காஜிக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றுக் குறிப்பு தஞ்சை மராட்டிய மன்னர்களில் முதல் மன்னராகிய ஏகோஜி எனப் பெறும் வெங்காஜிக்குச் சிவாஜி எழுதிய கடிதங்களில் இரண்டு பூனே நகரில் "மராட்டிய வரலாற்று அருங்காட்சியக'த்தில் உள்ளன. அவ்விரு கடிதங்களும் 'தஞ்சாவூர்சே மராத்திராஜே" என்ற மராத்தி மொழியில் எழுதப்பெற்ற நூலில் அச்சிடப்பெற்றுள்ளன. அச்சிட்ட நூலில் உள்ள அவ்விரு கடிதங்களின் நிழற் படம் பூனேயிலிருந்து பெறப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பெற்றுள்ளது. அவ்விரு கடிதங்களுள் முதல் கடிதக் குறிப்பிலிருந்து, அதற்குமுன் சிவாஜி ஓரிரு கடிதங்களை எழுதியிருத்தல் கூடும் என்று கருதலாம். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பம்பாய் இராணுவத்தின் இந்திய காலாட்படையின் முதற்படைக்குத் தலைமை பூண்டவரும், சதாராவில் ரெஸிடெண்ட் ஆக இருந்தவரும் ஆகிய ஜேம்ஸ் கிராண்டு டஃப் (James Grant Duff) என்பார் "மராட்டியர் வரலாறு' என்ற நூலை எழுதியுள்ளார். இதன் மூன்றாவது பதிப்பு கி. பி. 1873க்குரியது. இந்நூல் பக்கம் 127இன் அடிக் குறிப்பில், 'சிவாஜி வெங்காஜிக்கு நான்கு கடிதங்கள் எழுதினார். அக்கடிதங் களின் மூலப்படிகள் சதாரா அரசரின் வழியில் வந்த சிட்னிஸ் எனும் தனி அலுவலரிடம் உள்ளன. இப்பொழுதுள்ள சிட்னிஸ் அவர்களின் பாட்டனார் ரகுநாத் நாராயண் அனுமந்தே என்பவரின் வழியில் வந்தவரிடம் இருந்து பெற்றுப் பாதுகாத்துவந்தார். அவற்றை நான் ஆய்ந்து பார்த்தேன்; சிவாஜியின்