பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை வரலாற்று நூல்கள் திருச்சிக்குக் கிழக்கே கொள்ளிடத்துக்குத் தெற்கே காவேரி பாயும் நாட்டினை மராட்டிய அரசர்கள் 1676 முதல் 1855 வரை ஆட்சி புரிந்தனர். அன்னோர் வரலாற்றை முதன்முதலில் உறிக்கி ( Hickey)என்பவர் 'தஞ்சாவூர் torreliqui o Tara (Tanjore Maratha Principality), srsirp Guuslso ஆங்கிலத்தில் எழுதினார். திரு. கே. ஆர். சுப்பிரமணியன் என்பார் தஞ்சாவூர் lorr#Fun -sja rissir’ (Maratha Rajas of Tanjore) sr.sirp HirsSsi சிறிது விளக்க மாக எழுதினார். அவர்க்குப் பின்னர் திரு. சி. கே. சீனிவாசன் என்பார் ' sithri-së fisi Lorr#stuř -2, -f ' (Maratha Rule in the carnatic) sr.sirp நூலை அழகுற எழுதினார். ஸ்வார்ஷ் (Schwartz) பாதிரியாரைப் பற்றி எழுதிய வரலாற்றிலும் பிஷப் ஹீபர் பற்றிய நூலிலும் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாற்றுச் செய்திகள் பதியப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்ட மானுவல் என்ற நூலிலும் வெங்காசாமிராவ் மராட்டிய அரசர் வரலாற்றைச் சுருக்கமாக வரைந்துள்ளார். ' போன்ஸ்லே வம்ச சரித்திரம்' என்ற தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள மராத்திய கல்வெட்டின் தமிழாக்கம் 1802 வரை யிலான வரலாற்றை விளம்புகிறது. இந்நூல்கள் யாவும் அரசர்களின் பெரு வாழ்வு, வென்ற போர்கள், தோற்ற சண்டைகள், செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் கூறுவனவாக உள்ளனவேயொழியத் தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராத்திய அரசர்கள் செய்த நன்மைகள், அந்நாளைய இசை, நாடகம், வாணிபம், உழவு, பிற தொழில்கள் பன்மொழி இலக்கியம் முதலிய செய்தி களைக் கூறுவனவாக இல்லை. அங்ங்னம் கூற முற்படினும் சிறிதளவே குறிப்பிடுவனவாக உள்ளன. மோடி ஆவணங்கள் ஆகவே மக்கட் சமுதாய நிலையை அறிவிக்கும் சான்றுகள் உள்ளனவா என்று வினவியபொழுது, தஞ்சை சரஸ்வதி மகாலில் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசரது அன்றாடச் செய்திகள் குறிக்கப்பெற்ற மோடி ஆவணங்கள் பல குவிந்திருந்தன. என்றும், 1950-52இல் மோடி ஆவணக்கட்டுக்களை யெல்லாம் மேஜர் எஸ். என். கத்ரே (Major S. N Gadre) அவர்கள் ஆய்ந்தார் என்றும், அவர் அவ்வாவணங்களையெல்லாம் மூன்று பகுதிகளாகப் பிரித்தார் என்றும், A பகுதி B பகுதி என்றவை சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்துக்கு நிலையாகக் காப்பாற்றுதற் பொருட்டு அனுப்பப் பெற்றனவென்றும், C பகுதி ஏறத்தாழ 900 கட்டுக்கள் சரஸ்வதி மகாலில்