பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாட்டில் இருக்கச் செய்து ' தோர்கள ' என்ற பகுதிக்குச் சென்றோம். தாங்கள் துலுக்கர்களின் கெட்ட புத்தியினால் என் படைகளுடன் போரிட வேண்டும் என்று நினைத்துப் பெரிய படையை என்னைச் சார்ந்தவர்கள்மேல் ஏவினர்கள் என்று கேள்விப்பட்டேன். அந்தப்படை பால்கொண்டபுரத்துக்கு" வந்தது. அங்கு உங்கள் படையுடன் எங்கள் படை கடுமையாகப் போர் செய்தது; உங்கள் படை தோல்வியுற்றது." பிரதாப்ஜி, பீவஜீ, சிவாஜி டபீர்இம்மூவர் பிடிபட்டனர் ; மற்றும் பலர் கொல்லப்பட்டனர் பலர் ஓடிவிட்டனர்; பெரும் பரபரப்பு உண்டாயிற்று- இச்செய்திகளையும் கேள்வியுற்றேன் ; வியப்பு அடைந்தேன். தாங்களோ " கைலாசவாசி " பேரரசரின் உரிமை மகனாவீர் : மிகப் பெரிய மனிதரும் ஆவீர். இப்படி இருக்க எதையும் நினைத்துப் பார்க் காமல், அறம் மறம் ஆகியவற்றையும் நினைத்துப்பார்க்காமல், இப்படி வீணாகத் துன்புறுவது வியப்புத் தருவதல்லவா ? எதைப்பற்றி நினைப்பது என்று தாங்கள் கேட்கலாம். " நாம் அறத்திற்கு மாறாகப் பதின்மூன்று ஆண்டுகள் அரசச் செல்வம் எல்லாவற்றையும் நுகர்ந்தோம். இப்போது பாதிப் பங்குதானே கேட்கிறார் : அவருடையதை அவர்க்குக் கொடுத்துவிட்டு நலமாக இருக்கலாம் ' என்று தாங்கள் நினைக்கவேண்டும். ஆனால் தாங்கள் அதற்கு மாறாக நினைத்துக்கொண்டிருக்கிறீர். தங்கட்கு இறைவன் இறைவி ஆகியோருடைய அருள் முழுமையாக இருக்கிறது. நான் கெட்ட, துலுக்கர்களைக் கொல்கிறேன். ஆனால் தங்கள் சைனியத்தில் துலுக்கர்கள் இருப்பதால், தங்களுக்கு வெற்றி எங்ங்னம் உண்டாகும்? துலுக்கர்கள் தங்கள் பிழைப்பையே நினைக்கிறார்கள். இதனைத் தாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். போரில் குதித்துத் துரியோதனனைப்போல் அறிவுகெட்டுக் குடிமக்களைக் கொல்கிறீர்கள். நடந்தது நடந்துவிட்டது. இனியும் பிடிவாதம் செய்ய வேண்டாம். பதின் மூன்று ஆண்டுகள் நீங்கள் எல்லாவற்றையும் நுகர்ந்திர்கள். அதற்குப்பிறகு நான் சில நாடுகளை வென்றிருக்கிறேன். ஆரணி, பெங்களுர், கோலார், ஹஸ்கோட், கார்கோன் மற்றும் தஞ்சாவூர் போன்ற அப்பகுதிகள் உங்கள் கையில் இருக்கின்றன. அவற்றை மக்கள் கையில் விட்டு விடுவது நல்லது. மற்றும் தாங்கள் சேர்த்த நிலையியற்பொருள் யானை குதிரை முதலியவற்றுள் பாதிப்பங்கு கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் என்னைக் காண வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தாங்கள் என்னைக்கண்டு பேச வாய்ப்பு உண்டாக்கிக் கொண்டால் தங்கட்குத் துங்கபத்திரைப் பக்கத்தில் பான்ஹால் என்ற பகுதியில் மூன்று' லட்சம் ஹொன்ன மதிப்புள்ள நாட்டைக் கொடுப்பேன்." என்னிடம் உள்ள நாடுகள் தங்களுக்கு வேண்டாம் என்று நினைப்பதாயின் குதுப்ஷா அவர்களிடம் வேண்டிக்கொண்டு தங்கட்கு மூன்று லட்சம் வெகுமதி கொடுக்கச் செய்வேன்." இந்த இரண்டு விதமான எண்ணங்களைத் தங்கட்குத் தெரிவித்து இருக் கிறேன். இவ்விரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்று நடக்கவேண்டியது. பிடிவாதம் பிடிக்க வேண்டாம். நம்மில் நாம் பூசல் புரிந்து கொண்டு வருந்துவ தால் பயன் இல்லை. இதற்குப் பிறகாவது என்னைக்கண்டு பேசவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு, பாதிப்பங்கினைக் கொடுத்துத் தாங்கள்