பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 நலமுடன் இருக்கலாம். குடும்பத்தில் உட்பூசல் நல்லதல்ல. நான் தங்கட்கு மூத்தவன் என்ற முறையில் இதுகாறும் சொல்லிவந்துள்ளேன். இப்பொழுதும் சொல்கிறேன். கேட்டால் நல்லது நலம் பெறுவீர். கேட்கவில்லையெனில் தாங்களே வருந்துவீர்கள். நான் என்ன செய்யப்போகிறேன் ? மேலும் என்ன எழுதுவது ?" - கடிதம் எண் II செல்வமும் நீண்ட ஆயுளை உடையவரும், திருவுடைய பட்டத்தரசி களைப் பொருந்தியவரும், அரசச் செல்வம் பொருந்திய பேரரசர் வெங்கோஜி அரசர் அவர்களுக்குச் சிவாஜி அரசரின் ஆசி. அங்குள்ள நலன்களுக்கு மடல் எழுதுவீராக. --- செய்தி : பல நாட்களாகத் தங்களிடம் இருந்து மடல் இல்லை இதனால் மனம் அமைதியுறவில்லை. திரு இரகுநாத் பந்த்' அவர்கள் மடல் எழுதியுள்ளார். "நீங்கள் மனம் வெறுப்படைந்து இருக்கின்றீர். நீங்கள் முன்போல உடல் நலத்தில் மனம் செலுத்துவதில்லை. பண்டிகைகள் திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதில்லை. தங்களிடம் படைகள். நிறையவுள்ளன. ஆனால் அவற்றைச் செயல்படுத்தவில்லை. "வைராக்கியம்' (பற்றற்ற நிலை) மேற்கொண்டிருக்கிறீர். ஏதாவது ஒரு "தீர்த்தக்கரை"யில் அமர்ந்து பொழுதை வீணடிக்கிறீர்” - என்று எனக்குத் தெரியவருகிறது. இச் செய்தி எனக்குப் பெரிதும் வியப்பைத் தந்தது. 'கைலாசவாசி"யான சுவாமி அவர்கள், எப்படி எப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கி யுள்ளார். முன்பு யவனரிடத்தில் பணிபுரிந்து நீர் பெருமையடைந்து இருக்கிறீர். பிறகு நன்முறையில் செயல்புரிந்திருக்கிறீர். இவை யாவும் தாங்கள் அறிந்தனவே. முகம்மதியர்கட்கு உதவியாக இருந்து தங்கள் அறிவுக் கூர்மையால் அவர்களிடத்தினின்று நிறையப் பொருள் பெற்றீர். நாமும் மிகுந்த முயற்சியால் அரசைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். இதனைத் தாங்கள் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள். இத்தருணத்தில் என்ன நேர்ந் துள்ளது? தாங்கள் இல்லறத்துக்குரிய அறநெறிகளைப் போற்றி நடக்காமல், 'வைராக்கியம்" (பற்றற்றநிலை) மேற்கொண்டு, (நமக்குரிய வீரச்) செயல்களால் விளையும் பயனை நுகராமல், படைகளுக்கு வேலை கொடுக்காமல் வீணாக அவர்கட்கு ஊதியம் கொடுத்துத் தங்கள் செல்வத்தை வீணடிக்கிறீர்கள். உடலை வருத்திக்கொள்வது அறிவின் தன்மையா? இது என்ன நியாயம் ? உங்களுக்கு மூத்தவன் ஆகிய நான் இருக்க, வீணாகக் கவலைப்படுவது ஏன் ? இனி, வைராக்கியம்' கொள்ளாமல், மனக்கவலையைப் போக்கி, உம் நேரத்தை நல்லவழியில் செலுத்தவேண்டும். பண்டிகைகள் திருவிழாக்கள் ஆகியவற்றை முன்போல் நடத்தித் தங்கள் உடல் நலத்தையும் நன்கு பேணுதல் வேண்டும். தங்களைச் சார்ந்தவர்களுக்கு உரிய பணிகளை நல்கிப் பயனுள்ள செயல் களைச் செய்து அவற்றின்வழி மக்கட்குப் பணிபுரிந்து, மிக்கபுகழ் ஈட்டுதல்