பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தஞ்சை மராட்டிய


இப்பொய் ஆட்டம் மகாதேவபட்டணத்திலிருந்த துக்கோஜியால் சரபோஜிக்குத் தெரிந்தது. அரசர் வியந்து அப்பிள்ளையைக் கொன்றுவிடச் செய்தார். பின்னர்ச் சகம் 1649இல் சரபோஜி இறந்தார். இவரது மனைவியருள் சுலக்ஷணாபாயி, ராஜஸாபாயி ஆகிய இருவர் உடன்கட்டையேறினர்.

உடனே துக்கோஜி அரசெய்தினார். அந்நாளில் திருச்சியில் மீனாட்சி என்பவர் அரசாட்சி செய்து கொண்டிருந்தார். உள்நாட்டுக் குழப்பம் நடத் தமையின், துக்கோஜி மீனாட்சிக்குதவியாகப் படையை அனுப்பி உதவி செய்தார்.

துக்கோஜி சகம் 1657இல் இறந்தார்.

12துக்கோஜியின் மூத்த மகன் ஐந்தாவது ஏகோஜி அதாவது பாவாசாயபு ஆட்சியெய்தினார். அவர் யாரையும் நம்புவதில்லை. இப்படி எல்லார் பேரிலும் ஐயப்பாடு கொண்டு ஆட்சி செய்யுங்கால் சந்தா சாயபு தஞ்சாவூர் பேரில் படையெடுத்தார். உடல் நலமில்லாத போதிலும் அரசர் விடாது போர் புரிந்தார். சந்தாசாயபு கோட்டையைப் பிடிக்க முடியாதவராய்ச் சிறிது பணம் பெற்றுக்கொண்டு திருச்சிக்குப் போனார். இப்பாவா சாயபு சகம் 1658இல் இறந்தார்.

ஆட்சி செய்ய வேறெவரும் இன்மையால், பாவா சாயபுவின் மனைவி சுஜான்பாயி ஆட்சியை ஏற்றுக் கொண்டார். அவர் ஏறத்தாழ ஈராண்டுகள் ஆட்சி செய்தார். இவர் ஆட்சி புரிகையில் முன்னர்ச் சரபோஜிக்கு ஒருமகன் பிறந்ததாகப் பொய்யாகக் கூறிக் கொன்று விட்டார்களே அவன் பிழைத்திருக்கிறான் என்று ஒரு வதந்தியை எழுப்பிக் கோயாஜிகாட்டிகே என்பவர். ருபி என்றவளின் மகன் சுபான்யா என்பவனைக் கொணர்ந்து, தேவினாம்பட்டினத்திலிருந்த (Fort St. David) ஆங்கிலேயரிடம் சிறிது உதவி பெற்றுச் சகம் 1960 இல், தஞ்சையையடைந்து, காட்டு ராஜா வென்று பேர் வைத்து, சுஜான் பாயியை நீக்கி, அரசாட்சி எய்தச் செய்தார். இச் சூழ்ச்சி வெளிப்பட்டது. ஆகவே சகம் 1661 இல் சுபான்யாவை நீக்கிப் பிரதாப சிம்ம ராஜா அரசு எய்தினார். இதே ஆண்டில் பிரதாப சிம்மருடைய இரண்டாம் மனைவி திரெளபதாபாயி வயிறறில் துளஜா ராஜா பிறந்தார்.

தஞ்சாவூரில் இந்நாளில் சையிது என்னும் முகமதியர் கில்லே 13தாராகவும் சேனைத் தலைவராகவுமிருந்தார். ஏகோஜி காலம் முதல் நடந்துவந்த தருமங்கள் எல்லாவற்றுக்கும் இக்கில்லேதார் தடைகள் ஏற்படுத்தி வந்தார். இவர் கெட்ட நடத்தையுள்ளவர்: தன் அலுவல்களினால் பெற்ற செல்வாக்கினாலே சுபானியாவை அரசனாக்கினார்: பாவ சாயபுடைய சர்க்கேல் சித்தோஜியைத் துன்புறுத்தினார்: பிரதாப சிங்கரையும் அரசுகட்டிலேற்றினார்; தன் மகளைக் சந்தா சாயபுவின் மகனுக்கு மணம் செய்வித்து, அம்மருமகனைத் தஞ்சைக்கு அரசராக்க விரும்பினார்.

இச்சையிதுக்கு ஒரு தம்பியுண்டு; சயிதுகாசிம் என்று பெயர். அரசரிடம்