பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

போ. வ. ச. கூறத் திருமுடி கூறாமை இதற்கு அரண் செய்யும். எங்ங்னமாயினும் (மறந்தோ மறக்காமலோ, அமர்சிங்கு இறந்தபொழுது அவரது போகஸ்திரி' ருக்மிணி அம்மாள் தீக்குளித்தமை கூறியமையின், அமர்சிங்குக்குச் சேர்த்துக் கொண்ட மனைவி இருந்தமையை இவர் கூறாமற் கூறினார் என்பது வெளிப்

பவிட ,

பெரும்பான்மையான வரலாற்றுச் செய்திகள் (Historical events) திரு முடியில் கூறப்படவில்லை. இச்சுவடி எழுதிய காடேராவுக்கு அவற்றில் நாட்டம் இல்லாமை அல்லது வரலாற்று உணர்வு இல்லாமை காரணம் ஆகலாம்.

அமர்சிங்கு அவர் வழியினர் ஆகியோரைக் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று காட்டவேண்டும் என்பதே இவர் குறிக்கோள் எனக்கருதலாம். அமர்சிங்கு சென்ற விடமெல்லாம் மழை பெய்தமை, அமர்சிங்கு இறந்தபொழுது சந்தன மழை பெய்தமை, அமர்சிங்கும் அவர்மகனும் இறந்தபின்னர்த் தெய்வமாகப் போற்றப் பெற்றமை ஆகியவை இக்கருத்தை வலியுறுத்தும்.

அமர்சிங்கு சார்பான சுவடியாகையால் அமர்சிங்கின் பிறப்பு முதலியன மறைக்கப் பட்டன என்று கருதலாம்.

சுஜான்பாயி ஆட்சி செய்தமை கூறப்பெறவில்லை. பெண்பிள்ளை ஆட்சி செய்ததாகக் கூறுவது பெருமைக்குறைவாகக் கருதினர் போலும். இதற்கேற்ப மேலே குறிப்பிட்ட நாகநாத மொயித்தே ராவு சுவடியில் 43ஆவது பகுதியில் ஸ்திரியானவள் ராஜ்யம் செய்கிறதாவது; டிெயார் குழந்தையைக் கொண்டு வந்து பட்டம் கட்ட வேணும்' என்றுள்ளம்ை பெண் அரசாள்வதைச் சிலர் விரும்பவில்லை என்பதைக் குறிப்பிடுவதாக வுளது.

பிரதாப சிம்மர் ஆட்சியிறுதி வரையிலுள்ள செய்திகள் பெரும்பாலும் போ. வ. ச. வை யொட்டியே உள்ளன. எஞ்சிய பகுதி அமர்சிங்கு சார்பாகக் கூற வேண்டும் என்று கருதியே அதற்கேற்ப எழுதப்பெற்றது.