பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தஞ்சை மராட்டிய

களிலே அவன் சேனைகள் வெகுசாய்" புதைந்து போச்சுது." கொஞ்சம் சேனைகளுடனே விசால கெடிக்குப் போய் சேர்ந்தான். இதுக்கு முன்னே பல்லிவனத்து யேசவந்து ருஜா" பூரீங்காாபுரம் சூரிய ருஜா இவாள் ரெண்டுபேரும் ஜோஹற்கானுடைய உத்தரவின் பேரிலே விசால கெடியில் சண்டை பண்ணி அபசெயப்பட்டு யிருந்தவர்கள், மஹசூதென்கிற சேனபதி வந்த சேதி" கேழ்விப்பட்டு, அவன்பேட்டி வாங்கி மூணு பேரு மாய் விசால கெடியை சுத்திக்கொண்டார்கள். அப்போ ருஜா தம்முடைய சொந்த சேனைகளைக் கூட்டிக் கொண்டு உயித்தம் பண்ணி சத்துருக்களை செயித்து துரத்திப்போட்டு அவடம்விட்டுப் புறப்பட்டு ருஜகெடிக்கு வந்து சேர்ந்து தம்முடைய தாயாருக்கு சாஷ்ட்டாங்க நமஸ்க்காரம் பண்ணி நடந்த வற்தமானங்களெல்லாம் சொல்லி ஒருநாள் அங்கேதானே யிருந்தார். மஹ சூதனும்" ருெம்பவும் அவமானப்பட்டு பிருனனுடனே ஜோஹற்கான்" கிட்ட வந்து சேர்ந்தான். இந்தசேதி டில்லியீசுவர" னுடைய அம்மான் சாஸ்தாகானும் மத்த பேர்களும் கேழ்விப்பட்டு தங்களுடைய மனே சித்திப்படி ஆகிறதில்லை யென்று விதனப்பட்டார்கள்." இப்படியிருக்கிற சமையத்திலே சிவாஜிருஜா ஆலோசனைபண்ணி" பளுளா கெடியிலே யிருக்கிற திரும்பக் பாஸ்கருக்கு எழு தின வயணம்". பளைாகெடியை துலுக்காள் வசம் பண்ணிப்போட்டு தாம் இவடத்துக்கு பிறப்பட்டு வரவும்; அந்த கெடிக்கு சமானமா இருக்கிற கெடிகளை அல்லியெதல்லடிாவண்டையிலிருந்து பிடித்துக்கொள்ளுவோம்; ரெண்டு யிடத் திலே உயித்தம் பண்ணக்கூடாது; ஆகையா" லிதை நிற்செயமாக" எண்ணி சுறுக்கிலே பிறப்பட்டு வரவேணுமென்று சொல்லி அனுப்பிவிச்சத்தின் பேரிலே திரும்பக பாஸ்கர் ருஜாவுடைய உத்திரவின்படியே அந்த கெடியை ஜோஹர் கான்" சுவாதீனம் பண்ணிப்போட்டு அவன் பேட்டியும் வாங்கிக்கொண்டு அவன் கிட்ட யிருந்து வெகுமதிகளையும் வாங்கிக்கொண்டு ருஜாகிட்ட வந்து சேர்ந்தார். இந்த சமையத்திலே அல்லியெதல் ஷாவுக்கு தோணினது: ருஜாகிட்ட ஜோஹர்கான் லஞ்சம் வாங்கிக் கொண்டு விட்டுவிட்டானென்று அனுமானப் பட்டு ஜோஹர்கானுக்கு எழுதின' வயணம் நீ ருஜாகிட்ட லஞ்சம் வாங்கின

ச8. அவன் சேனைகள் வெகுசாய் - சேறுகளிலே வெகுசேனைகள் (டிச119)

59. “It was the hottest part of the year. The streams had all dried up” என்றமை (த.காகாவ் பக். 189 இங்குக் கருதுக

89. யேசவந்து ருஜா - ஜஸ்வந்த்சிங் (போ. வ. ச. பக். 51) 61. சேதி - வர்த்தமானம் (டிச119) . மஹசூதனும் - மோகசூதனும் (டி3119) 63. ஜோஹர்கான் - சோரகான் (டி3119) 64. டில்லியீசுவரன் - டில்லிசுவான் (டி3119) 65. ஆகிறதில்லையென்று விதனப்பட்டார்கள் - ஆகிறத்தில் சமுசயமாச்சுது (டி3119) 66 முதல் 67 வரையுள்ளவை டி 3119 இல் இல்லே 68. உயித்தம் பண்ணக்கூடாது. ஆகையால் - புத்தம் பண்ணுகிறது கூடாத காரியமானபடியிகுலே 9ே. நிற்செயமாக - நிச்சயமாக (டி3782; டி3119) 10. ஜோஹர்கான் - சுகார்கான் (டி3119) 71. எழுதின - கடுதாசி யெழுதின