பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. தமிழர் சமூக வாழ்க்கை


பேராசிரியர் அர. சு. நாராயணசாமி நாயுடு,

செந்திக் குமார நாடார் கல்லூரி, விருதுநகர்

தமிழர் வாழ்க்கையின் பல கூறுகளைப் பற்றி அறிஞர் பலர் ஆய்ந்தெழுதுகின்றனர். ஆதலின் தலைப்புப் பெரிதாகத் தோன்றினும் சில கூறுகளைப் பற்றிச் சில கூறுதலே இக்கட்டுரையின் நோக்கமாம்.

1

தெளிவாக அறிந்துகொள்ள முடியாத மிகப் பழங்காலத்தே தமிழர் தமிழ்நாட் டெல்லையுளகப்படாத பல நில மக்கட் சமூகங்களொடு ஓரளவு தொடர்புகொண்டு விட்டனர். ஈழ நாட்டார், வடுக நாட்டார், வடவடுக ராகிய ஆரியர், மிலேச்சர், யவனர் இவர்களைத் தமிழர் நன்கறிந்திருந்தனர். தமிழ்நாடு கடல் கடந்து பல நாடுகளொடும் வணிகத் தொடர்புடையதாயிருந்தது. பிற பல நாட்டார் இந்நாட்டில் வந்து வதிவாராயினர்.

தமிழ் மூவேந்தர் திறம்படப் 'படைகுடிகூழமைச்சு நட்பரண்' ஆய எல்லா முடையராய் அரசோச்சிப் பிற நாடுகளிலும்