பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


உலகம் தோன்றிய நாளிலிருந்து மனித சமுதாயம் நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறிக்கொண்டு வருகிறது. இதை நாம் அந்தந்த நாட்டுச் சரித்திரத்தின் வாயிலாக அறிகிறோம்.

மனித சமுதாயம் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகியும் முறையாக வாழத் தெரியாத மக்கள் கூட்டம் பல இக்காலத்திலும்கூட இருப்பதைக் காண்கிறோம்.

ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் தாய் மொழியில் தம்முடைய வாழ்க்கைச் சிறப்புகளை அவ்வப் பொழுது கூறி வந்திருக்கின்றனர். அவற்றில் தலையாயது நம் தமிழர் சிறப்பு.

அத்தகைய சிறப்பு மிகுந்த வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் இதிலுள்ள கட்டுரைகள் சான்றுகளுடன் தெளிவாக உரைக்கின்றன.

கட்டுரையாசிரியர்கள் அனைவரும் தமிழறிஞர்கள். அவர்களைப் பற்றி இலக்கிய உலகம் நன்கு அறியும். இதிலுள்ள எட்டுக் கட்டுரைகளும் மதுரை தமிழ்ச் சங்கப் பொன்விழா மலரில் வெளிவந்தவை. அவற்றைத் தொகுத்து வெளியிட்டுக் கொள்ள அன்போடு அனுமதித்த கட்டுரையாசிரியர்களுக்கு இதய பூர்வமான நன்றி.

சென்னை
1-6-1957

முல்லை முத்தையா