பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜவல்லிபுரம் கிருஷ்ணசுவாமி - வல்லிக்கண்ணன்

ஆக மலர்ச்சி பெற்று, 65 வருடங்களாக எழுத்துத் துறையில் ஈடுபட்டிருக்கிறார். சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், வரலாறு, தன்வரலாறு, மொழிபெயர்ப்பு, கட்டுரை முதலிய இலக்கிய வடிவங்கள் பலவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்திப் பெயர்பெற்றவர். இவர் எழுதிய சரஸ்வதி காலம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பார்திக்குப் பின் தமிழ் உரைநடை, தமிழில் சிறுபத்திரிகைகள் ஆகிய ஆய்வுநூல்கள் தமிழ் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. இப்போது இவருக்கு 85 வயது. இப்பவும் படிப்பது, எழுதுவது, கடிதங்கள் எழுதுவது, இளைய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிப்பது என்பதை வாழ்க்கை முறையாகக் கொண்டு இயங்கி வருகிறார்.