பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

326

(9) " இருஞ்சகாத் தம்ஈ ரைஞ்ஞா

றிருமுந்நூ றுடனெண் பத்தஞ்

சொருங்குசித் திரபானுப்பேர்ச்

சமைமகத் திங்க ளொப்பில்

பொருஞ்சிவ நிசிவெள் வளிப்பேர்

புனைதினந் தில்லை மன்றில்

பெருங்குணத் தோர்க் கரங்கே

றுற்றநூற் பெற்றி தானே.”

அரும்பொருள் விளக்க நிகண்டு குறித்து இது காறும் கூ ற ப்ப ட் ட செய்திகளின் சுருங்கிய தொகுப்பை மேலுள்ள பாயிரப் பாடல்களில் காண லாம்.

ஆசிரியர் அருமருந்தைய தேசிகர் தமது நிகண் டின் ஒவ்வோர் எதுகைத் தொகுதியின் முன்னும் கடவுள் வணக்கம் பாடியுள்ளார். முதல் தொகுதி யாகிய ககர எதுகைக்கு முன்னுல்மட்டும் பிள்ளையார் காப்பும் பாயிரமும் உள்ளன. மற்ற பதினேழு எது கைத் தொகுதிகளின் முன்னும் முருகக் கடவுள்மேல் வணக்கம் பாடியுள்ளார். ஒவ்வொரு தொகுதியின் முதற்பாவிலும் முருகனை வணங்கி யிருப்பதோடு, இன்ன எதுகையைப் பற்றிச் சொல்லப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். இதுபோலவே ஒவ்வொரு தொகுதியின் முடிவிலும், செந்திலில் வாழும் முருகனை வணங்கும் அருமருந்தையன் என்கிற நான், இன்ன எதுகையைப் பற்றி இத்தனை பாடல்கள் பாடியுள்ளேன் என்று மொத்த எண்ணிக்கையுடன், எதுகைப் பெயரும் தம் பெயரும் தம் ஊர்ப் பெயரும் தம் வழிபடு கடவுள் பெயரும் கூறியுள்ளார். இவற்றின்