பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

தொகை நிகண்டு

இதன் ஆசிரியர் சுப்பிரமணியக் கவிராயர்; திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரினர். இவர் பதினெட்டாம் நூற்ருண் டின் பிற்பகுதியினரா யிருக்கலாம்.

சிவசுப்பிரமணியக் கவிராயர் தமது நாமதீப நிகண் டின் பாயிரத்தில் தொகை நிகண்டைக் குறிப்பிட் டுள்ளார்:

8 பன்னுந் தொகைநிகண்டிற் பார்க்கவிரி வாமவைகள்

இன்னசுருக் கத்தடங்காவே.”

என்பது நாமதீபப் பாடற்பகுதியாகும். இது தவிர வேருென்றும் தொகைநிகண்டைப் பற்றி விளக்க மாகத் தெரியவில்லை.

திவாகரத்தின் பன்னிரண்டு தொகுதிகளும் மூன்று பெரும் பிரிவுக்குள் அடக்கப்பட்டிருக்கும் செய்தி முன்னரே அறிந்ததே. அவற்றுள் மூன்ருவ தாகிய பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி என்னும் பிரிவைப் பற்றி மட்டும் விளக்கமாகச் சொல் வதுதான் இந்தத் தொகை நிகண்டு. அதாவது, இரு சுடர், முக்குணம், ஐம்பொறிகள் முதலிய தொகைப் பொருள்களை விளக்குவதே இங்கிகண்டு. அதனல் தான் இது தொகை நிகண்டு என்னும் பெயர் பெற். நிறது.