பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

506

கற்றுக்கொள்ள நிகண்டுப் பாடம் பெரிய கருவியாகத் திகழ்ந்தது; அதாவது, சொற்பொருள் விளக்கும் நிகண்டு நூற்களைக் கற்றிருந்தால் எந்தச் செய்யுள் - உரை நடைப் பகுதியிலுள்ள அருஞ்சொற்களையும் புரிந்துகொள்ள முடியுமன்றோ ? எனவே, மற்ற கலைப் பாடங்கட்கு முதன்மையான கருவிப் பாடமாகத் திகழும் மொழிப் பாடத்திற்கும் முதன்மையான கருவிப் பாடம் நிகண்டுப் பாடமாகும், என்பது புலனாகும். சுருங்கச் சொல்லின், நிகண்டுக் கல்வி ஒருவகை 'மொழி அறிவியல்' ஆகும்.

நிகண்டு நூற்களிலுள்ள பன்னிரண்டு தொகுதி களிலும் பல்வகைக் கலைச்சொற்கள் பொருள் விளக்கம் செய்யப்பெற்றிருப்பதை முன்பு கண்டோம். எனவே, நிகண்டு கற்றவர்கள் மற்றவர்களினும் எளிதாகப் பல்வகைக் கலைநூற்களையும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்; தாமும் பல்வகைக் கலைநூற்கள் எழுதுவதற்கு வேண்டிய கலைச் சொற்களை எளிதில் கையாள முடியும். பிற மொழிகளிலுள்ள கலை நூற்களைத் தமிழில் பெயர்க்கப் போதுமான கலைச்சொற்கள் தமிழ் மொழியில் இல்லை என்று இக்காலத்தில் குறைப்பாடு வோர் நிகண்டு நூற்களைப் புரட்டுவாராயின் அவற்றி லிருந்து பலதுறைக் கலைச் சொற்களைப் பெறுவது திண்ணம்! முயல்வாராக!

இவ்வளவு நன்மை தரத்தக்க அரும்பெருங் கலைக் கருவூலங்களாகிய நிகண்டு நூற்கள் இக்காலக் கல்வித் துறையால் கைவிடப் பட்டதேன்? இவ்வினாவிற்கு விடை வேண்டும்?