பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 த. கோவேந் தன்

வேண்டா என்றும், அது பழைய தமிழ் ஒலி அன்று என்றும் கெள என்பது கவ் என்பதேயாம் என்றும் கூறுவார் பலர். கெள என்பது நெடிலாக முதலில் வந்து எதுகை கொள்ளும் பொழுது அதனை வேறு என்றே கொள்ளவேண்டும் என்பாரும் உளர். அது வடமொழி மரபினையே பின்பற்றியணதால் வந்து படிந்த முறை என்பார் பிறர். அவ்வாறு கெள என்பது கா முதலிய நெடிலோடு இந்த முறையில் எதுகையில் அளவொத்தல் அருமையேயாம் ஒள என்பதனைக் கவ் என்றே எங்கும் கொள்ளுதலும்கூடும். கெளவு என்ற பொருளில் வரும் கெள என்ற சொல்லும் உண்டு. கொள் என்ற பொருளில் வரும் கெள என்பது மராட்டியச் சொல் என்பர்

மேற்கூறிய கொள்கைகளை வற்புறுத்துவதுபோல் கெள என்ற எழுத்தினைக் கல்வெட்டுக்களில் காண்பது அருமை ஆகிறது.

17ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்தில் கெள என்ற வடிவம் கீழே காட்டப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டு ബ്

ஒ என்பதன் நெடிலே ஒள என இந்திய ஐரோப்பிய மொழி ஆராய்ச்சியாளர்கள் கொள்வதற்கேற்பக் கோ என்பதன் வடிவினைப் போலவே கெள என்பதும் இருந்திருத்தல் வேண்டும். கெ, கை என வேறுபடுவது போலக் கோ, கெள என்பனவும் ஒரே வகையில் மாறுபடுதல் வேண்டும், அப்படியானால் கைா என

இருந்திருத்தல் வேண்டும்.