பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 த. கோவேந்தன்

என்பதற்கு நான்கு மேலே நான்கு கீழே, 9 என்பதற்கு மூன்று கோடுகள் உள்ள மூன்று வரிகள். 10 என்பதை என்ற குறியாலும் 100 என்பதைச் சுருள் வடிவாலும், 1000 என்பதைத் தாமரை மலராலும், 10,000 என்பதை நீண்ட கொக்கியுடைய செங்குத்துக் கோட்டாலும், 100,000 என்பதைத் தவளையாலும், 1,000,000 என்பதை இரண்டு கைகளையும் மேலே தூக்கிய மனிதனாலும் குறித்தனர். மற்ற எண்களைக் குறிக்க மேலே காட்டிய குறிகளையே பலவகையாகப் பயன்படுத்தினர்.

கல்வெட்டில் எழுதும் பழக்கம் கி பி 3ஆம் நூற்றாண்டுடன் நின்று போயிற்று. பப்பைரஸில் எழுதும் வழக்கம் சு கி பி 5ஆம் நூற்றாண்டுவரை இருந்து மறைந்து போயிற்று எகிப்தில் கிறிரு தவ மதம் ஏற் பட்டதும் எகிப்தியக் கிறிரு தவர், கிரேக்க எழுத்து களுடன், கிரேக்க எழுத்துகளால் குறிக்க முடியாத ஏழு எகிப்திய ஒலிகளைக் குறிக்க ஏழு எகிப்திய மக்கள் எழுத்துகளையும் மாறுதல் செய்து சேர்த்து எழுதினர் அராபியர் அவர்களைக் கிப்டி என்று அழைத்ததால் அவர்கள் காப்ட் என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் வழங்கிய மொழி காப்ட்டிக் (Coptic) எனப் பட்டது இப்போதும் அங்குள்ள கிறிரூ தவப் பாதிரிமார், சில கிரேக்க எழுத்துகளையும் சேர்த்துக் கொண்டு எகிப்திய நெடுங்கணக்கைச் சிலவேளைகளில் பயன்படுத்து கின்றனர்

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் பேகன்மதம் (Paganism) மறைந்த பிறகு எகிப்தியச் சித்திர முறை எழுதப்படுவது நின்றுபோனதால் அதன் பின்னர்ச் சித்திர எழுத்துடைய பப்பைரஸுகள் மிக அரியனவாகவே காணப்பட்டன. அவைகளைக் கண்டாலும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள்.

1799-ல் நெப்போலியன் எகிப்துமீது படையெடுத்த போது போஸார்டு (Boussard) என்னும் பிரெஞ்சுத்