பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 த. கோவேந்தன்

டகரமாகும். (முள்+தலை>முட்டலை) பழங்காலத்தில் அது ஆய்தமாக மாறியதும் உண்டு. (முள்+தீது> முஃடீது) இதனைப் பிற்காலத்தில் ஆய்தக் குறுக்கம் என்பர் இந்த ஆய்தமே தலை ஒலியென வழங்கப் பெற்றது போலும். தனிக்குறிலின்பின், சொல்லீறாக வாராத இடங்களில் ளகரம் கெடும். (நீள்+தல்> நீடல்) ளகரத்தின்பின் மெல்லினம் வருமானால் ளகரம் னகரமாகும். ளகரத்தின் பின் நகரம் வருமானால் நகரம் ணகரமாகும் தனிக்குறிலசையின் முன் வந்த சொல்லி றானால் ளகரமும் ணகரமாகும் (முள்+நன்று> முண்ணன்று) இல்லையானால் ளகரம்கெடும். (கோள்+ நன்று>கோணன்று). பழைய ணகர ஈற்றுச் சொற்கள் பின்னே மெல்லோசையிழந்து ளகரமாயிருக்கக் காண்கி றோம்.

கொண்>கொள்

எண்>எள்

மாண்>மாள்.

இந்த ளகர மெய்யை விட்டொழித்து எதுகை கொள்ளுதலும் அசை பிரித்தலும் உண்டு “ஊன் கொள்பவர்” என்பது நேர்நேர் நிரை எனக் கனிச் சீராகாது, நேர்நிரை நேர் எனக் காய்ச்சீராம். ளகரம் மொழிக்கு முதலாகாது; மொழிக்கு ஈறாகும். ஆனால் பிற்காலத்தில் வினைமுற்று அல்லாதவை ளகரத்தில் முடியும்போது உகர ஈறு பெற்று வரும். இந்த நிலையில் அத்தகைய ளகர ஈற்றின்பின் யகரம் வரின் இடையே இகரம் தோன்றக் காண்கிறோம்.

ளகரம் பெண்பால் விகுதியின் ஈற்றில் வரும்; இது இக்காலப் பேச்சு வழக்கில் மறைந்தொழியக் காண்கி றோம். (வந்தாள்>வந்தா).

பிறமொழி லகரம் தமிழில் வரும்போது பெரும் பான்மையும் ளகரமாக ஒலிக்கும் (Plate> பிளேட்; Blade-u5Gam()).