பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 த. கோவேந்தன்

நூற்றாண்டில் ஆண்ட அசோக சக்கரவர்த்தியின் காலக் கல்வெட்டுக்கள் தென்னகத்தை தவிர மற்ற இடங்களில் (வரிப் படம் 1) இருக்கின்றன ஆனால் இவற்றில் முழு இந்தியாவின் வட மேற்கு எல்லை மாகாணத்தில் கிடைத்த இரு கல்வெட்டுக்கள் மட்டும் காரோஷ்ட்டி என்னும் லிபியிலும், மற்றவை பிராமி லிபியிலும் இருக்கின்றன. காரோஷ்ட்டி வலப்புறமிருந்து இடப்புற மாக எழுதப்படும் வளைவுகள் நிரம்பிய ஒருவகை எழுத்து. இதற்கு மூலமான எழுத்து மத்திய ஆசியாவி லிருந்த செமெட்டியர்கள் வழங்கிய எழுத்தென்பர். இப் பிராந்தியத்தில் மட்டும் இந்த எழுத்து கி. பி 5 ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்து பிறகு முழுவதும் வழக்கொழிந்தது.

பிராமி லிபியோ வெனில், முதலில் எவ்விதம் எழுதப் பட்டதென்று தெரியவில்லை ஆனால் இது அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே இடப் புறமிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டு வந்திருக்கிறது. தவிர, அக் காலத்திலேயே இவ்வெழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்த வடிவைப் பெற்றுத் திகழலாயிற்று. இந்தப் பிராமி எழுத்திலேயேதான் கி. பி சுமார் நாலாம் நூற்றாண்டு வரை இந்தியா முழுவதும், தென் கிழக்காசியாவிலும் கூட, கல்வெட்டுக்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த லிபியே காலக்கிரமத்தில் பல வடிவ மாறுதல்கள் பெற்று, கி. பி. நாலாவது நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தியாவின் பல் வேறு பாகங்களிலும் உண்டான பல பிராந்திய லிபிகளுக்குத் தாய் லிபியாக ஆயிற்று. இதனால், தற்காலத்தில் இந்தியாவில் கையாளப்பட்டு வரும் தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஒரியா, வங்காளி முதலிய பல லிபிகளும் இந்தப் பழைய பிராமியினின்றே உற்பத்தியாயின என ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். தமிழ் நாட்டில் கி. பி. 8 முதல் 15ஆம் நூற்றாண்டு வரை வழங்கிவந்த வட்டெழுத்தும் கூட இந்தப் பிராமியி