பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 த. கோவேந்தன்

ஆய்தம் என்ற மூன்றுவகையான புள்ளி எழுத்துக் களையுமே அன்றி ஆய்தத்தினை மட்டும் அன்று, பின் எட்டாம் நூற்றாண்டைய நந்திவர்மனது காசாக்குடிச் செப்பேட்டில் வெஃகா என்ற சொல்லில் வரும் ஆய்தத்திற்கு மேலும் கீழும் புள்ளியும், இடையே கோடும் வடிவமாக அமைந்திருக்கக் காண்கிறோம் (S. A, vol H.No. 73, Plate No XV, line 115, opposite p 352). @1J@5@τιο&ητJrr&rfiçör திருச்செந்துர் வட்டெழுத்துக் கல்வெட்டிலும் அஃகம் என்ற சொல்லில் வரும் ஆய்தம் இவ்வாறு அமைந்திருக்கக் காண்கிறோம் (Epgraphia indica Vol. 21 Plate-opposite p 110-line 35) at 6arG6u G3;rrgi) &TGup3,589jlb வட்டெழுத்திலும் ஒரே வடிவமே காண்கிறோம் தொடக்கத்தில் வகரம் உயிர்ப்பாய் நின்றபோது ஆய்தம் எழும் என மேலே கண்டதற்கு ஏற்ப இரு புள்ளிகளின் இடையே பிறைபோல் வளைந்த கோடு வகரமோ என ஆராய்தல் வேண்டும் வகரம் புள்ளி பெற்றால் மேலே பெறும்; மேலும் அஃது ஆய்தப் புள்ளியாக மாறியதற்குக் கீழே மற்றொரு புள்ளியும் பெற்றதோ எனவும் ஆராய்தல் வேண்டும் மகரமெய் மேற்புள்ளி பெற மகரக் குறுக்கம், மேலும் குறுகியதற்கு அடையாளமாக உட்பெறு புள்ளி பெறுவதனை இங்கு ஒப்பு நோக்கலாம் (தொல் எழுத் 14) விசர்க்கமே ஆய்த எழுத்தாக இருபுள்ளி கொண்டு விளங்குகிறது என்றால் இடையில் உள்ள வகரம் (அல்லது உகரம்) போன்ற கோடு வருவதற்கு வழி இல்லை வகரத்தினிடத்திலேயே முதலில் ஆய்தம் வந்தது என்பதும், பின்னரே லகர, ளகரங்களின் இடத்திலும் வந்ததனால் அதே குறியை அவற்றினிடத்தும் வழங்கினர் என்பதும் இதனால் உறுதிபெறும் போலும்

நச்சினார்க்கினியர் காலத்திலே மூன்று புள்ளியாக ஆய்தத்தினை எழுதும் வழக்கம் பழையதாகியது போலும் அவர் காலத்தில் ஏற்பட்ட மாறுதலில் ஒன்றனை அவர் குறிக்கின்றார் 'அதனை இக்காலத்தவர் நடுவுவாங்கியிட்டு எழுதுப என்பது காண்க (தொல்