பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


செல்லம்: மாந்தம் என்றால் அது எதைக்குறிக்கும்?

பாட்டி: மந்தம் என்பதைத்தான் குறிக்கும்.

செல்லம்: மாந்தத்தில் பலவகை உண்டா பாட்டி?

பாட்டி: ஆம். எட்டு வகை மாந்தங்கள். அவற்றுள் வாய் மாந்தம் போர் மாந்தம் என இருவகை மாந்தங்களே பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் வருகின்றன.

செல்லம்: இவற்றை எப்படிக் கண்டு பிடிப்பது? பாட்டி குடித்த பால் அடிக்கடி வாந்தியாகிக் கொண்டிருந்தால், அது வாய் மாந்தம் எனப்படும். செரிக்காமல் வயிற்றுப் போக்குப் போய் கொண்டிருந் தால் அது போர் மாந்தம் எனப்படும்.

செல்லம்: குழந்தைகளுக்கு மாந்தம் வந்தவுடனேயே டாக்டரிடம் கொண்டு போய்க் காட்டுவது நல்லதல்லவா பாட்டி.

பாட்டி: மாந்தம் ஒரு கொடிய நோயாக இருந்தாலும், அதற்கு டாக்டர்கள் தேவையில்லை. ஆங்கில வைத்தியமும் கூடாது. ஊசி போடுவது உயிர் போக்கும் செயலாகும்.

செல்லம்: பின் என்ன செய்ய வேண்டும்?

பாட்டி: வேப்பெண்ணெய்யை ஊற்றி ஒருவிளக்கை ஏற்றிக்கொள். மாந்தக் கட்டையின் ஒரு முனையை அதே எண்ணெய்யில் நனைத்து அதே விளக்கில் காட்டு கட்டையின் நுனி தீப்பற்றி எரியும். அதிலிருந்து எரிந்து விழுகிற 5 அல்லது 4 சொட்டு எண்ணெய்யை ஒரு சிறு சந்தனக் கல்லில் தாங்கி, எரியும் மாந்தக் கட்டையாலேயே அதைத் தேய்க்க வேண்டும். அவ்வளவுதான். அந்த எண்ணெய்யை ஒரே விரலில் வழித்துப் பிள்ளையின் நாக்கில் 3 தடவை