பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 109

“எத்தினால் பத்தி செய்தேன்” என்றும், இதுபற்றி என்னை இகழ்ந்து அருளாமை கூடாது என்பார், “என்னை நீ இகழவேண்டா” என்றும் கூறுகின்றார். முத்திச் செல்வனும் அதற்கு முதல்வனும் அவனாதல் அவற்றையே தமக்கு நல்க வேண்டும் என்பதற்கு முத்தனே முதல்வா என்றும் இதற்கு அம்பலத்தே ஆடும். ஆடல் காட்சி வாயிலென்பது தோன்ற “தில்லை அம்பலத்து உன்ஆடல் காண்பான் அடிய னேன் வந்தவாறே” என்றும் உரைக்கின்றார்.

- இங்ஙனம் பத்தனாய்ப் பாடமாட்டேன் என்றனர். அடுத்த பாட்டில், பத்தி பண்ணற்குரிய கருத்துடைமை தோன்றவும் நான் பாட இயலாதவன் என்பார், “கருத்தனாய்ப் பாடமாட்டேன்” என்றும், அதற்குக் காரணம் நீ ஒருத்தராலும் கருவிகரணங் களைக் கொண்டு அழியும் அறிவுக்கு எட்டாதவன் என்பார் “ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடைய சோதி” என்றும், ஆயினும், நீ எம்போல்வார் அறிதல் வேண்டும் என்ற பேரருளால் தில்லை யம்பலத்துக் கூத்தாடும் பெருமானாக உருவு கொண்டு அருள்புரிகின்றாய் என்பார். “தில்லை. தன்னுள்...சிற்றம்பலத்தே திருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறு” என்றும், அதற்குத், தில்லைப் பதியைத் தேர்ந்து கொண்டதற்குக் காரணம் அதன் திருத்தமுடைமை என்றற்குத் ‘திருத்தமாம் தில்லை” என்னும் கூறுகின்றார்; வைதிகமும் சைவமும் கை கலந்து களிநடம்புரியும்