பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 137 காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையில் புகுதலே மகரிஷிகளுக்கு வழக்கமாக நடை பெற்று வந்தது. மகா பாரதத்திலும் மற்றும் பூர்வ புராணங்களிலும் வேதரிஷிகளைப் பற்றிய கதைகளும், சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலை நிறுத்துகின்றன. மேலும் சுவாமி விவேகானந்தர் வேதங்களின் பின் சேர்க்கைகளாகிய உப நிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவைகள் வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவர்களால் சமைக்கப் பட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவையே வசிஷ்ட, வாம தேவாதி ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துக்கள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்கு சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால் பச்சை வேதம் என்பது மந்திரம் அல்லது சம்ஹிதை எனப்படும் பகுதியேயாகும் என்று பாரதி குறிப்பிடுகிறார். இங்ங்ணமிருக்கப் பிற்காலத்து ஆசாரியர்களிலே சிலர் வேதத்தைக் கர்ம காண்டம் என்றும் அதனால் தாழ்ந்த படியைச் சேர்ந்ததென்றும், உபநிஷத்தே ஞான காண்டம் என்றும் ஆதலால் அதுவே வேதத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்றும் கருதுவாராயினர். இங்ங்ணம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.