பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

вы009шлlo nмплғамбloо шплёмбін —яльере — з запалены 43 தமிழ் மொழி வளர்ச்சியில் அடுத்ததாக சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெரும் காப்பியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. அதில் சிலப்பதிகாரம் முதலிடம் பெறுகிறது. சிலப்பதிகாரம் மூன்று தமிழ் நாடுகளையும் மூன்று தமிழ் மன்னர்களையும், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் இணைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் மூன்று நகரங்கள், அவைகளின் சிறப்புகள், அவைகளின் வளம், அங்கு வாழ்ந்த மக்களின் செல்வச் செழிப்பு, சந்தைகள், கடைகள், அவைகளில் குவிந்திருந்த பொருள்கள், பலவேறு துறையிலான பணியாளர்கள், வர்த்தகம், வாணிபம், வெளி நாட்டவர் குடியிருப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியச் சிறப்புமிக்க மாதவியின் ஆடல் பாடல்கள், கூத்து, நாட்டியம் பல்வேறு கூத்து வகைகளின் விவரங்கள், அவைகளின் சிறப்புகள், ஆடல் அரங்குகள், அவைகளின் விவரங்கள், தமிழ் இசை, கரங்கள், தாளங்கள், அவை பற்றிய தமிழ்ச் சொற்கள், இதர வகை இசைப் பிரிவுகள், ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, மூலமாக ஏராளமான தமிழ்ச் சொற்கள் தமிழ் மொழியின் சொற் களஞ்சியத்தில் சேருகின்றன, சேர்ந்து குவிகின்றன. மணிமேகலை நூலில் அன்று பாரதத்தில், தமிழகத்தில் நிலவிய விவாதத்தில் இருந்த பலவேறு தத்துவ ஞானப் பிரிவுகள், அவைகள் பற்றிய தர்க்கங்கள், பட்டி மண்டபங்கள் முதலின தமிழ் மொழிக்கு புதிய சொற்களைச் சேர்க்கின்றன. இனி தமிழ்மொழி வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களின் பங்கு மகத்தானது. தமிழகத்தில் பக்தி இயக்கத்தின், பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ் மக்களின், பாரத மக்களின் தவப்பயனாகும். சைவத்திருமுறைகள், அதில் தேவாரம் திருவாசகம், மூவாயிரம் அருங்கவிதைகளைக் கொண்ட தத்துவ