பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எழுத்தும் சொல்லும் 44 ஒளிவிளக்கு திருமந்திரம், பெரிய புராணம் முதலியனவும், வைணவ பக்தி இலக்கியங்கள் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், இராமானுஜ நூற்றந்தாதி, மற்றும் அவருடைய படைப்புகள், வேதாந்த தேசிகருடைய படைப்புகள் முதலியன, தமிழ் மொழியை வளர்த்துச் செழுமைப் படுத்திய ஈடு இணையற்ற பேரிலக்கி -யங்களாகும். சங்கத் தமிழ் முப்பதும் என்று ஆண்டாள் தனது திருப்பாவைப் பாடலில் குறிப்பிடுகிறார். தமிழ்மொழியில் உள்ள பக்தி இலக்கியங்களின் விரிவும் ஆழமும், அவைகளின் வீச்சும், வேறு எந்த மொழியிலும் காணமுடியவில்லை. தமிழ்பக்தி இலக்கியங்களை உலகிலேயே தலை சிறந்த இலக்கியங்கள் என்று கூறலாம். அவைகளை உலகு தழுவிய அளவில் அறிமுப்படுத்த வேண்டியதும் பரப்ப வேண்டியதும், அவைகளின் பெருமைகளை உலகிற்கு உண்ர்த்த வேண்டியதும் தமிழ் கற்றறிவாளர்களின் கடமையாகும். பக்தி இலக்கியங்களைப் பற்றியும், அவை தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள மகத்தான பங்கு பற்றியும் இங்கு சில வரிகளில் கூறி விடமுடியாது. அதற்கான தனி கட்டுரையோ, நூலோ கூட போதாது. பக்தி இலக்கியங்கள் பற்றி தனி ஆராய்ச்சிகளும் தனி முயற்சிகளும் தேவை. நமது பல்கலைக் கழகங்களும் தமிழ்த்துறைகளும் அதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். பக்தி இலக்கியங்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள திருக்கோயில்கள், திவ்ய தேசங்கள், அவைகளின் சிறப்புகள், அக்கோயில்கள் கொண்டுள்ள திருத்தலங்களின் செழிப்பும் வளமையும், நீர் வளமும், திருக்குளங்களும், நந்தவனங்களும், ஸ்தல விருகூடிங்களும், சோலைகளும் மக்களின் நல்வாழ்வும் ஆட்சிகளின் சிறப்புகளும், திருவிழாக்களும் அத்திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேதமின்றி திரளாகக் கூடுவதும்,