பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தமிழ் விழாக்கள் பற்றி 76 திருவிழாக்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொரு அறிவாளியும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.” என்று பாரதி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறை வேற்றவும் அதற்குரிய செயல்பாடுகளையும், கடமைகளையும் வகுத்துக் கொள்ளவும், ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் பாரதியின் கருத்துக்கள் இந்த உரை நடைப் பகுதியில் வெளியிடப் பட்டுள்ளன. பாரதி சிந்தித்த இந்த வழியில் பாரதி வழி காட்டிய இந்த வழியில் பாரதி இலக்கிய பரம்பரையினர் பலரும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டார்கள். தமிழகத்தில் பல நல்லவர்களும் அறிவுடையோரும், தமிழ் வளர்ச்சியிலும், தமிழக வளர்ச்சியில் அக்கரை கொண்டவர்களும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் சேர்ந்து பல நகரங்களிலும் பல ஊர்களிலும், வள்ளுவர் மன்றங்களும், கம்பன் கழகங்களும் இளங்கோவடிகள் மன்றங்களும், இராமலிங்கர் சபைகளும், பாரதி மன்றங்களும் மற்றும் பல இலக்கிய அமைப்புகளையும் நிறுவியும் அந்த மகான்களின் பெயரில் விழாக்களும் சிறப்புக் கூட்டங்களும் இப்போது நடைபெற்று வருகின்றன. தைப் பொங்கல் நாளையொட்டி மூன்றாம் நாள் வள்ளுவர் தினமாக அரசு சார்பிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் திருவள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டமும், காரைக்குடியில் கம்பன் நினைவாக தமிழ் தாய் கோயிலும், எட்டயபுரத்தில் பாரதி நினைவாக மணி மண்டபமும் நிறுவப் பட்டிருக்கின்றன. இந்தப் பெரியோர்களுக்கு பல இடங்களில் சிலைகளும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. தெருக்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் அவர்களுடைய பெயர்கள் சூட்டப் பட்டிருக்கின்றன. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் விழாக்கள் எடுக்கப் படுகின்றன.