பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


இழப்பது, விட்டுக் கொடுப்பது, விடுவிப்பது ஒவ்வொன்றுமே ஒரு தனிப்பட்ட பாதுகாப்பே.

129. இப்பொழுது - இடையில்

“இது இருந்திராவிட்டால்” எனப் பொறாமை கொண்ட காதலர்கள் தங்கள் காதலன், காதலியின் முந்திய காதலைப் பற்றிக் கூறுவதில் என்ன பயன்?

ஒவ்வொரு வாழ்க்கையும் வளர்கின்ற உடலம். உரிமை அல்லது உரிமையில்லாத இதைப் பிரிக்கவோ துண்டுகளாடவோ முடியாது அது முழுமையானது. கொஞ்சம் குறைவோ அதிகமோ இல்லாதது. ஒரு பகுதியை மறுப்பது எல்லாவற்றையுமே மறுப்பதாகும் ஒத்துக் கொள்வது என்பது முந்தியே உள்ளவற்றை விடுவிப்பதாகும்

நினைவு கூர்வதால், பழையனவெல்லாம் நிகழ்வன போல மனத்தில் கொள்ளப்படுகின்றன

ஒவ்வொரு கணமும் வேறுபட்ட இப்போது நடுவில் அப்போது மாற்ற முடியாததையும் மாற்றக் கூடிய முழுமை ஆகும்

130. நீரைப் போல் அறி

நீர் வடிவத்தையும், உருவத்தையும் மாற்றினாலும், தனது சாற்றினைத் தன்னிடம் வைத்துக் கொள்கிறது