பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 107


ஆறு நீரை மாற்றுகிறது. அதன் போக்கையும் மாற்றுகிறது, ஆனால் தன் சாறத்தைத் தக்க வைக்கிறது.

மாற்றத்தில் மாறாததை நம்பு நகர்ந்தும் தங்கியும், மாறியும், மாறாமலும் நீரைப் போல, ஆற்றைப் போல இரு அறிந்து கொள், மென்மையாகு. மென்மையாகி மாறு மாறிப் பொறுத்துக் கொள்

நீரைப் போல அறிந்து கொள். ஆற்றைப் போல எண்ணு.

131. ஆறாக இரு

ஒவ்வொன்றும் வேறு எதுவாகவோ மாறுகிறது. போவதை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு வீணானது ஆவதும். அழிவனவற்றில் எப்படி முயற்சி தீவிரமாகக் கூடும்? மாற்றத்திற்குள்ளேயே வாழ்வது சிறந்தது ‘இயற்கை நெறி'யைப் பற்றி அறிவது நன்று

செய்யாதது என்பது ஆற்றின் ஓடுகின்ற அமைதியைப் போல. நீர் மாறும் போது உள்ள அமைதியான ஆற்றைப் போல இரு மாற்றம் சரியான வழி செல்கயிைல்  ஓசையின்றி இரு

‘இயற்கை நெறி’ தான் ஆறு செயல்தான் தண்ணீர், நீராகவும், ஆறாகவும், மாற்றத்திற்கு எப்போதும் அணியமாய் இரு நீர்த்தொடர் கூட அமைதியாய் உளது.