பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



136 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


160. இருப்பதும் இல்லாததும்

முழுமை என்பது ஆண் வெற்றிடமாக இல்லாதது பெண். இருப்பதும், இல்லாததும் முழுமையைச் சமமாகச் செய்கின்றன.

ஆண்மை என்பது உருவமானது. முழுமையானது. காணக் கூடியது. காண்பிக்கப்படுவது, வெளிப்படுத்தப் படுவது அவன் பேசப்படுபவன், தெளிவாகத் தெரிபவன். வினா இல்லாமலேயே உள்ள விடை

பெண்மை என்பது உருவமற்றது. வெற்றிடம், புலப்படாதது, மறைக்கப்பட்ட ஒன்று அவள் பேசப்படாதவள். கமுக்கமானவள், மறைபுதிரானவள், விடை இல்லாத முதல் வினா!

161. உள்ளதும் இல்லாததும்

எது உள்ளதோ, அது இருக்கிறது எது இல்லையோ அதுவும் இருக்கிறது

ஆணின் வெறுமை வெளியில் உள்ளது. விலக்கப் பட்டது. அப்பாற்பட்டது. மறந்த ஒன்று. பெண்ணின் வெறுமை உள்ளே உளது. நினைவில் வைக்கப்பட்ட ஒன்று.