பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



244 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


கொருவர் முந்த முயலாதே வெற்றியடைபவனுக்குத் தோற்பவன் தேவை பழிவாங்கும் எண்ணம் தீங்கிழப்பதை உருவாக்குகிறது வலையில் மாட்டிக் கொள்ளும் முட்டாள்தனமான வட்டம் பார்!

பணிவில் பிறந்து, பணிவில் இறக்கிறோம் தோற்றம் முதல் முடிவு வரை இது மெய்ப்பிக்கப் பட்ட வழி

26. சொற்கள் எளியவை

சொற்களைப் பயன்படுத்தல் எளிதுதான் ஆனால் அதனால் பயன் என்ன? 'இயற்கை நெறி' கூறப் படமுடியாத ஒன்று ஒவ்வொரு சொல்லையும் தேடு ஒரு சொல்லை மட்டும் தேடுவதால் பலனில்லை. இதை 'தாவோ’ என அழை ஆனால் அது எதுவாக அழைக்கப்படுகிறதோ, அது அதுவாக இல்லை ‘இயற்கை நெறி’ எங்கே? ஒவ்வொரு சொல்லிலும் சொற்களினிடையே சொற்களுக்கு அப்பாற்பட்டும்

சொற்களை மற சான்றோர்களின் திருவாய் மொழிகளை மனத்தளவில் கடைப்பிடி பின்னர் சான்றோர்களின் வாய்மொழிகளிலிருந்து விடுபடு பிறகு அங்கே உள்ளது "இயற்கை நெறி”