பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


வினாக்கள் ஒன்றிற் கப்பால் மற்றது. மற்றதற்கு அப்பால் “இயற்கை நெறி"

இரண்டையும் கடந்து அறிய, இரண்டிற்கும் அப்பால முழுமையை எண்ணு மனம் எப்படி அவ்வளவு பெரிதாக இருக்கக்கூடும் குறைவாக எண்ணுவதாலா? சிறியதில் கூட ‘இயற்கை நெறி' முழுமையாய் உள்ளது

இரண்டையும தாண்டி எவ்வாறு ஆணும் பெண்ணும் செல்வது? நீரைப் போல பிளந்துகொண்டு கூடுவது போலே

31. பிறகும் வெகுநாள் இருக்கும்

தொடக்ககால ஆர்வத்துண்டல் வெகு நாள்களாகவே இருந்தது பிறகும் வெகு நாள்கள் இருக்கும் இதுவரை இருந்ததால் இப்போது அது தோல்வியுறாது இதை ஏற்றுக் கொண்டு அதனுள் இனிமையாக வாழு இரண்டு உயிர்களின் நிறைவு அடைவதைவிட அதனிடம் ஏராளமாய் உள்ளது

32. இயற்கையை கண்டறிய

நடப்பதற்கு இரு கால்களையும் பயன்படுத்து கேட்பதற்கு இரு காதுகளையும் பயன்படுத்து காண்பதற்கு இரு விழிகளையும் பயன்டுத்து. புரிந்து கொள்ள