பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



56 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


69. விட்டு விட

ஒருவரை ஒருவர் சமன் செய்து செல்லும் போது ஆணும் பெண்ணுமாக செல்க.

சமநிலைப்பட ஆணை விட்டு விட்டுப் பெண்ணைக் காண்க, பெண்ணை விட்டு விட்டு ஆணைக் கண்டு கொள்க; ஒருவரை விட்டு மற்றவரைக் கண்டுபிடி மற்றவரை விட்டு விட்டு ஒவ்வொருவரையும் காண்க

பின், ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டு, இருவரையும் விட்டுவிட, இருவரையும் தெளிவாகக் காண்க இருவரையும் பிடித்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் விடும் போது, ஒவ்வொருவரையும் சரியாகக் காண்க.

70. ஆண் ஒளியை விரும்பியிருந்தால்

ஆண் ஒளியை விரும்பியிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு, பெண்ணுடன் படுத்து இருள் என்ற வாயிலை அடைந்திருக்கமாட்டான். எளிமையாக அறிவதை விரும்பிய எவரும் இருளுடனும் பெண்ணுடனும் சேரமாட்டார்.

ஒளியில் குருட்டுத்தன்மை இருப்பது போல, இருளில் அதிகம் பார்க்க முடியும் இருளில்தான் பார்ப்பதின் தொடக்கம் பெண்ணின் ஈரமான