பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 61


75. எளிய அமைதி

சொற்கள் அமைதியை மறைக்கும் போது, பேசாமையைக் கவனி, சொற்களை அல்ல

எளிய சொற்களே தோழமையின் பேசாமை எளிமையான அமைதியே ஒன்றிணைந்திருப்பதைக் குறிக்கிறது

76. வெறுமையும் முழுமையும்

பிரிவின் தொடக்கம்தான் சந்திப்பு சந்திப்பின் தொடக்கமே பிரிவு புறப்படுவது எப்போது? வந்து சேர்வது எப்போது? முடிவிலிருந்துதான் பிரிவு தொடர்கிறது - ஒன்றிலிருந்து மற்றொன்று

மற்றதிலிருந்து தான் ஒன்று உருவாகுகிறது. ஆக, ஒரே நேரத்தில நினைவு கூர், மற

நடப்பதெல்லாமே எதிர்பாராதவை, வியப்பை ஊட்டுபவை எதிர்பாராதது கண்டு கொள்ளப்பட்டு எதிர் நோக்கப்படுகிறது

தனிமையிலோ, ஒன்றுசேர்ந்தோ, ஏதுமில்லாமலும், முழுமையாகவும், அறிந்தும், அறியாததுமாகத் தொடர்க