பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

153

கட்டுப்பாடு பிறந்தது திரு. வி. க. என் செய்தார் அக்கட்டுப்பாட்டுக்கு அடங்கி கடந்தாரா? இல்லை. கட்டுப்பாட்டை மீறினர்; ஏகாம்பரத்திடம் சென்றார்; பணி செய்தார்.

அம்மை அந்த ஏகாம்பரத்தின் உ யி ைர க் குடித்தது. இளைஞர்கள் சுடுகாட்டுக்குப் போதல் கூடாது’ என்ற கட்டளை பிறந்தது. அதைப் பொருபடுத்தவில்லை திரு. வி. க. சுடுகாடு சென்றார். ஈமக் கடன்களில் பங்கு கொண்டார். அன்றிரவு தெருத் திண்ணையில் துரங்கினர். காலையில் குழாய் நீரில் மூழ்கினர். வேப்பங் கொழுந்து தின்றார்.

வடிவேல் முதலியார் என்பவர் திரு. வி. க.வின் உறவினர். காட்பாடியிலே கிணற்றில் வீழ்ந்து இறக் தார் அவர். அவர் உடலைச் சென்னையில் சேர்க்க வேண்டும் என்று வடிவேல் முதலியாரின் அன்னையார் பிடிவாதம் செய்தார். உடலைக் காட்பாடியினின்று கொண்டு வருதல் எளிதா? என்று உறவினரும் மற்றை யோரும் திகைத்தனர்.

திரு. வி. க. தலையிட்டார். வேலூர் சென்றார். வேலூர் ககர சபைத் தலைவராயிருந்தவர் வி.எம். இராம சாமி முதலியார். திரு. வி. க.வின் நண்பர்; அவரைக் கண்டார் திரு. வி. க. அவர் தம் துணை பெற்றார். வடி வேல் உடல் சென்னை சேரச் செய்தார்.

திரு. வி. கவின் உறவினர் ஒருவர். ஆந்திர காட்டில் அரசாங்க ஊழியம் செய்தவர். அவர் தமது உடலையும் ஊழியத்தையுமே பெரிதாக எண்ணியவர்; ஏழை என்று திரு. வி. கவை அவமதித்தவர். அவ ருக்குத் திடீரென வேலை போயிற்று. இழந்த வேலையை