பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தன்னலங்கருதாமையும் பிறர் நலன் பேணலும்

ஸ்ரீநிவாச ஐயங்கார் சென்னை வக்கீல்; பெரிய வக்கீல்; பெரும் பொருள் ஈட்டியவர். சென்னையில் அட்வகேட் ஜெனரலாயிருந்தார். 1920 ல் அப்பதவியை உதறிவிட்டுத் தேச சேவையில் ஈடுபட்டார். 1924 25, 26ம் ஆண்டுகளில் ஐயங்காரும் திரு. வி. கவும் சேர்ந்து தொண்டாற்றினர். சட்டசபையில் திரு. வி. க.வை நுழைக்க எண்ணினர் ஐயங்கார். ஆனல் திரு. வி. க. அதற்கு இணங்கினர் அல்லர்; பட்டம் பதவி முதலியன தமக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

“நீங்கள் இலெளகிகத்தில் சிறிது மேம்பட முயல வேண்டும். குறைந்த பட்சம் வீடு ஒன்று உங்களுக்குச் சொந்தமாக வேண்டும். கார் ஒன்று வேண்டும். நீங்கள் விருப்பம் தெரிவித்தால் வேண்டிய ஏற்பாடு செய் கிறேன்’ என்றார் ஐயங்கார்.

சொந்த வீடும் காரும் எனக்கு எதற்கு வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். அச்சுக்கூடம் இருக்கிறது. பத்திரிகை இருக்கிறது. புத்தகங்கள் எழுதுகிறேன். இவற்றால் எனக்குப் போதிய வருவாய் வருகிறது.