பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

திருக்குறளில் செயல்திறன்


       "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
        பூரியார் கண்ணும் உள." (241)

என்ற குறளால் அருட்செல்வந்தான் மிகமிக உயர்ந்த செல்வம் ஆகும் என உணர்த்துகிறார். ஏனெனில் "பொருட்செல்வம் அயோக்கியர், பொய்யர், சூதர், கொலையர், மூடர் ஆகியோரிடத்தும் இருக்கும். அருட்செல்வம் ஒருக்காலும் அவர்களிடத்தில் போய்ச்சேராது; அவர்களைத் திரும்பியும் பார்க்காது" என்ற இக்குறள் பொருட்செல்வத்தின் உயர்வை அழித்துக் காட்டுவதை நன்கு அறியலாம்.

இவை போலவே, "சொல்லின்" அருமை பெருமைகளை,

       "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
        இகல்வெல்லல் யார்க்கும் அரிது" (647)

என்றும்,

       "நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
        யாநலத்து உள்ளதூஉம் அன்று" (641)

என்றும், மிகமிக உயர்த்திக் கூறியிருப்பதெல்லாம், செயலின் வலிமையை உயர்த்திக் காட்டவே ஆகும். இதனை,

       "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
        சொல்லிய வண்ணம் செயல்" (664)

என்ற குறளால் சொல்லின் பெருமையை அழித்துக் காட்டுவதால் நன்கு அறியலாம்.

ஆம்! மலையளவு பேசுவதைவிட கடுகளவு செய்வது நல்லது என்பது சான்றோர் கருத்து. கோடை இடி