பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடியும் குறளும்

43


உற்சாகம் என்று பலர் தவறாகக் கருதி வருகின்றனர். இது மக்களின் இயற்கையான வலிமையை அதிகமாகத் துடிக்கச் செய்து வெகு விரைவில் பாழாக்கிவிடுகிறது. போதை குறைந்துவிட்டால் உடனே வலிமை குறைந்துவிடும். மறுபடியும் வேலை செய்ய வேண்டுமானால் அதே பொருளைத் திரும்பவும் பயன்படுத்தியாகவேண்டும். காலப் போக்கில் தான் பழகிய பொருளைப் பயன்படுத்தாமல் தன்னால் எதுவுஞ் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.

இவ் உண்மையைப் பீடிக் குடியரிடத்தும் பொடி அறிஞரிடத்துங் காணலாம். இதனாலேயே நல்லறிஞர் பலர் இவற்றைக் கெட்ட பழக்கங்கள் எனக் கூறியிருக்கின்றனர் பேரப்பிள்ளைகளின் தீங்குகளே இவ்வளவு பெரிதாக இருக்குமானால், இவைகளின் அப்பன் பாட்டன்களின் தீமைகளை யாரிடம் போய்க் கூறுவது? இவ்வுண்மையைத் தொழிலாளர் தோழர்களே நன்குணர்வது, நாட்டிற்கு நலமாக இருக்கும்.

நல்ல பழக்கம், தீய பழக்கம் என பழக்கங்கள் இரு வகைப்படும் பழக முடியாததாகவும், செய்யக் கடினமானதாகவும், நினைத்தால் எளிதில் கைவிடக் கூடியதாகவும் இருக்கும் பழக்கங்கள் பெரும்பாலும் நற்பழக்கங்களாகவே இருக்கும். பழக முடிவதாகவும், நடக்க எளிதாகவும், கைவிட எப்போதும் முடியாததாகவும் இருக்கின்ற பழக்கங்கள் பெரும்பாலும் கெட்ட பழக்கங்களாகவே இருக்கும். இதில் குடிப்பழக்கம் இரண்டாவதைச் சார்ந்தது. குடித்தவன் தன் தவறை நினைத்துத் திருந்திக் குடிக்காது வாழ முயற்சித்தாலும், அது முடியாத ஒன்றாக முடிந்துவிடும். அவர்களின் வாழ்வு அதோடுதான். தேனில் விழுந்து குடித்த ஈயும் எறும்பும் திரும்பிவந்தா உயிர் வாழ்கின்றன? பாவம், ஈயும் எறும்புமாவது கேனின் சுவைக்காக உயிர் விடுகின்றன. இவன் எதற்காக...? ? ?