பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




திருக்குறள் புதைபொருள்

1. உயிரினும்...!


               ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
               உயிரினும் ஓம்பப் படும்.


என்பது திருக்குறளில் ஒரு குறள்.

'விழுப்பம்’ என்பது சிறப்பு என்று பொருள்படும். அது முறையே குணம், நலம், புகழ், பெருமை, உயர்வு என்றாகும். இத்தகைய நலன்கள் அனைத்தையும் கொண்ட சிறப்பை 'ஒழுக்கம் தரும்' என்பது வள்ளுவர் கருத்து.

நல்லொழுக்கம், தீயொழுக்கம் என ஒழுக்கம் இரு வகைப்படும். எனினும் "ஒழுக்கம்" என்றால், அது தீயொழுக்கத்தைக் குறிக்காமல் நல்லொழுக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கும் என்பதை இக்குறள் நமக்கு அறிவிக்கிறது.

ஆடை அணிகள், மாட மாளிகைகள், ஆடு மாடுகள், அலங்கார வகைகள், பொன் பொருள்கள், நீர் நிலங்கள், வண்டி வாகனங்கள் முதலியவற்றுள் எதுவும் விழுப்பம் தராது என்பதை இக் குறள் வெளிப்படையாகக் கூறுகிறது.

மேடைமீது ஏறி ஆவேசமாய்ப் பேசுகிற பேச்சு. அருமையாக எழுதுகின்ற எழுத்து, அள்ளிக்கொடுக்கின்ற கொடை, அதிகாரம் வகிக்கின்ற பதவி ஆகியவைகளால்