பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

11. சூது

சூதாவது சூதாடினால் வரும் குற்றங்கூறுதல். இது மேற்கூறிய வற்றோடொத்த வியல்பிற்றாதலின், அதன் பின் கூறப்பட்டது.

981. வேண் டற்க வென்றி.டி ரைஞ் சூதினை வென்றது உந்

துண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

(இ-ள்) வெல்லு மாயினும் சூதினை விரும்பா தொழிக. வென்று பெற்ற பொருளும், தூண்டிலின்கணுண்டாகிய பொன்னை மீன் விழுங்கினாற் போலும், (எ-று).

பொன் என்பது இரும்புமாம், பின்பு கேடுபயக்கு மென்ற வாறாயிற்று. உம்மையான் வெல்லான் என்பது துணிவு. இது

- - --- T சூதாடலைத் தவிர்க என்றது.

932. அகடாரா ர ல்ல லுழப்பர் சூ தென்னு

முகடியான் மூடப்பட் டகர்.

(இ-ள்) தமக்கு உளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற். நிறையப்பெறார்; அதுவேயன்றி, அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார், (எ-று).

மறைத்தல்-நற்குணங்களைத் தோன்றாமை ம ைற த் த ல். மேல் சூ த ா ட ல் ஆகாதென்றார்; அதனால் குற்றமென்னை என்றார்க்கு, இவையிரண்டு குற்றமும் உளவாம் என்று கூறப் பட்டது. 2

933. உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து

மடையாவா மா யங் கொனின்.

(இ-ள்) உடையும், செல்வமும் உணவும் புகழும் கல்வியு

கென்று சொல்லப்பட்ட ஐந்து பொருள் சேரலான் அவற்றை கைய கத்துக் கொள்ளின், (எ-று)