பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

11. நிறையழிதல்

(இ-ள்) புலப்பலெனச் சென்றயான் முயங்கினேன், நெஞ்சு முற்படப் பொருந்துதல் உறுதவனைக் கண்டு. (எ-று).

இஃது, ஊடுதல் தீமையென்ற தோழிக்கு, முன்னொருகால் அவன் பிரிந்து கூடியவழி என்மனம் செய்தது இது” என்று தலை மகள் கூறியது. o

1260. நாணெரை வொன்றோ வறியலர் காமத்தாற்

பேணியார் பெட்பச் செயின்.

(இ-ள்) நாணென்பதென ன்றும் அறியார்கள் மகளிர். காமம் காரணமாக, விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வா ராயின்,

(எ-று).

அவர் விரும்புமாறு செய்தமையாலே தாண முண்டாகா தென்றவாறு ஆயிற்று. விரும்புமாறு செய்தலாவது, தலைமகன் தனது அன்பு தோன்ற நிற்றலும், தலைமகள் வேட்டது செய்தல் வன்மையும். பிரிந்து வந்தவனோடு புலவனது கூடுதல் நான மாகாதோ?, என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 10

12. அவர்வயின் விதும்பல்

அவர் வயின் விதும்பலாவது அவர் வரவின்கண்ணே துக்கமுறு தல் என்றது காதலர் வரவு வேட்டிருத்தலென்றது. இவையெல்லாம் தோழிக்குக் கூறினவாகக் கொள்க. நிறையழிந்தார் எப்பொழுதும் காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பாராதலான், அதன்பின் கூறப்

படடது .

126 1 . வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்

பைதனோ யெல்லாங் கெட.