பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

20. புகழ்

231 தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்

தோன்றலிற் றோன்றாமை நன்று.

( இ- ள்) பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க;

அ. தில்லாதார் பிறக்குமதினிற் பிறவாமை நன்று, (எ-று) .

பிறக்கிற பழியுண்டாம்; பிறவாதொழிய அஃதில்லையாம் ஆதலான் நன்றென்று கூறினார்.

இது, புகழ்பட வாழவேண்டு மென்றது. 1

232 ஈத லிசைபட வாழ்த லது வல்ல தரதிய மில்லை மரயிர்க்கு.

(இ-ள் புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல்; அக்கொடை யானல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. (எ-று).

இது, புகழுண்டாமாறு கூறிற்று. 2

233. உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்

றிவார்மே னிற்கும் புகழ்.

(இ-ள்) சொல்லுவார் சொல்லுவனவெல்லாம், இரந்து வந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாதின்ற புகழை, (எ-று).

கொடையினாற் புகழுண்டாமென்றார்; அஃதென்ன? குணத் தினாற் புகழுண்டாகாதோ என்றார்க்கு, உலகத்துப் பாடுவாரும் கொடுத்தான் என்றே பாடுவாரென்றது. 3

234. ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

(இ-ஸ்) உயர்ந்தபுகழல்லது இணையின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. (எ-அ).

இது, புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.