பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

த. கோவேந்தன், டி. லிட் *: }{33

தேவியை அணையும் தோள்களையுடைய மாலும், பிரமனுடன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையையுடைய தேவேந்திரனும் திருவடிகளைத் துதித்து வணங்குகின்ற பழநி மலையிலும் கதிர்காமத்திலும் பொருந்தி, உயர்வடைந்து கொண்டே இருக்கும் சைவ சமயத்திற்கு நாயகனே ஆறு திருமுகங்களை உடையவனே திருவேரகம் என்ற திருத்தலத்தில் தங்கியருளும் பெருமானே குமரக் கடவுளே குருபரனே குகக் கடவுளே இளம் பருவத்தை உடையவளும் குறவர் குலத்தில் வளர்ந்தவளும் ஆகிய வள்ளியம்மையாரின் கணவனே! சரவணோற்பவனே! அசுரர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கியவனே இளம் பிறை சடா பாரத்தில் அணிந்தருளிய சிவபெருமான், குருவே என்று. நல்ல புகழ்ச்சிச் சொற்களைச் சொல்லும் பெருமை வாய்ந்த மயில் வாகனக் கடவுளே! என்று கூறி, ஒவ்வோர் நாளும் மனம் உருகாமல், குயிலை ஒத்த இனிய குரலொடு கூடிய சொற்களைச் சொல்லும் நல்ல இளம் பருவப் பெண்களும், கண்களால் நெஞ்சைக் கரைப்பவர்களும், தெருக்களிலே எப்பொழுதும் அன்னப் பறவையைப்போல் நடப்பவர்களும், தம்மிடத்து ஆசை கொண்டு, சிரிக்கின்ற காளையர்கள் தம் செல்வத்தை உடனே அபகரிப்பவர்களும், எப்படிப்பட்டவரும். தம் வசப்படும்படி, கண்டாரைத் தன் வயப்படுத்தும்படி முகத்தை அழகு செய்துகொள்பவர்களும், தமது கொங்கைகளின்மேல் பொருந்தி இருக்கும் ஆடையை நழுவவிட்டு, நடுத் தெருவில் நிற்பவர்களும், செல்லப் பொருள் அற்றவர்களுடைய, மனமும் முறியும்படி நழுவவிட்டு உழப்பி விடுகின்றவர்களும் கண்ணாகிய வலையினால், வஞ்சனை செய்து, தன்னிடம் வந்த ஒவ்வொருவரும் மகிழும்படி, பஞ்சணையின் மேல் மனத்தை உருகச் செய்பவர்களும், ஆகிய விலை மாதர்களின் அவர் வசத்தில் சஞ்சரித்து, அவர்களுடைய அடிமைகள் என்று சொல்லும்படி, பெண்கள் ஏவிய