பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

183



ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு

வாய்ப்பாய் வீசும் பொற்பிரபை நெடுமதிள் யாழ்ப்பா னாயன் பட்டின மருவிய பெருமாளே!

உலகங்களுக் கெல்லாம் தாயாய் இருப்பவளும், திதுமாலுக்குத் தங்கையாய் இருப்பவளும், நன்னிகையும், உமாதேவியும், திருநடனத்தைச் செய்கின்ற ஆநந்தத்தையுடைய சிவையும், திரிபுரையும். பேயும் பூதமுஞ் சூழ்ந்து இருக்கப்பெற்ற பைரவியும். புவனேசையும், எல்லாவற்றையும் படைத்து, அவைகளைக் காப்பாற்றி, அசுரர்களுடைய முப்புரத்தை எதனையும் கருதாது அழித்தவளும், அழகிய விளையாட்டினால் இறைவனாரின் இடது பக்கம் தங்குபவளும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய புத்திரனே துறவிகள் நாள்தோறும் தர்ப்பணங்களுடனுஞ் செபங்களுடனும், துதி செய்து, எதார்த்த அறிவைப் பெற்ற பரனுக்குங் குருவாக நின்றருளியவனே செய்யுள் இலக்கணத்தை ஆராய்ச்சி செய்கின்ற சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தமிழ் மொழியை அகத்திய முனிவருக்கு அருளிச்செய்த முருகனே! இரவலர்கள் தாம் வந்து கேட்க அவர்களுக்கு விருப்பத்தோடும் மகிழ்வோடும், அவர்களுக்குக் கிடைக்கும்படி அள்ளி வீசி எறிகின்ற, பொன்னினது ஒளி மிகுந்ததும், நீண்ட மதிளை உடையதுமாகிய, யாழ்ப்பாணாயன் பட்டினத்தை, பொருந்தி அமர்ந்திருக்கின்ற பெருமானே! பூமாலையைச் சூடிய, கொத்துக் கொத்தாக விளங்கும் மலர்களைச் சூடிய கூந்தலை உடையவர்களும், நோக்கினால் வேலாயுதமும், வாளாயுதமும், மன்மதன் விடுகின்ற, சமரைப் புரிகின்ற கருத்த சிறந்த கண்ணாகிய கணையோடு, யமன் விடுகின்ற தூதுவனும், ஒத்திருக்கின்ற தாவி, நாளும் கையிலே பொருளுடையவர்களின், அவர்களிடத்து அவர் கைப்பொருளைப் பறிக்கும் முயற்சி உடையவர்களின், தம்மைப் பற்றிக் கொள்ளும் மயக்கத்தை, பூண்பிக்கும் மாய வித்தைகளைத் தெரிந்து கொண்டிருக்கும் மை