பக்கம்:திருவருட் பயன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



82

ஒர் உவமை வாயிலாக விளக்குவது அடுத்து வரும் குறள் வெண்பாவாகும்.

    39. பரப்பமைந்து கேண்மினிது மாற்கலன்மேற் பூசை
        கரப்பருந்த நாடுங் கடன்.

இ-ள்: சஞ்சல மனத்தாற்படும் விரைவினையடக்கி அருளின் தன்மையே யிணிதாகக் கேட்டு மனங்கொள்வீராக. அதனை நாடாது சிற்றின்பங்கண்மேற் படரும் இப் புல்லறிவாண்மை, உறியின் மேல் வைகும் இனிய பாற்குடத்தின் மீது இருக்கும் பூஞையானது, சுவர்த்தலையில் ஒடும் கரப்பினைத் தாவிப் பற்றி நுகர விசாரிக்கும் முறையையினை ஒக்குமாகலான் என்க.

பூசையும் உறியின்கட் பாற் குடத்தின்மேல் இருந்தவாறே அதனைப் பருகாதே கரப்பினைப் பற்ற விசை கொண்டு வாவுங்கால், அது கைப்படின், சிறிதின்மையில்லாத யுணவாதலேயன்றித் தாவலான் மிக்க வருத்தமும் எய்தும் கைப்படாக்கால் வருத்தத்தோடு, கரப்பினையும் போக்கிப் பாற் குடத்தினையும் உடைத்து மிக்க துன்ப மெய்தும். உயிர்களும் அனாதியே கூடிகின்ற அருளகத் தடங்கிப் பேரின்பத்தினை யெய்தாது சிற்றின்பங்கண்மேற் படருமாயின், அதுபோல ஒருகா லெய்துஞ் சிற்றின்பத்துக்கு மன மொழி மெய்களால் துன்பமுற்றும், அஃது எய்தாக்கால் இருமையின்பமும் இழந்தும் மிக்க இடர்ப் படுமென்பதாம்.

இவை ஐந்து பாட்டானும், அருள் துணையும் இறைமையுமாகியும் ஆதாரமாகியும் நிற்றலை அறியாதிருத்தலும், எவ்விடத்தும் இருப்பதனைக் காணாது மயங்கலும், அதனால்