பக்கம்:திருவருட் பயன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



83

வரும் இன்பமெய்தாமையும், அதன்மேற் பற்றுச் செய்யாமையும் ஆன உயிரின் குற்றங் கூறப்பட்டன.

விளக்கம்: உயிர்கள் திருவருளை நோக்காமைக்குக் காரணம், சஞ்சல மனத்தாற்படும் விரைவினையடக்காது ஐம்பொறிவாயிலாக நுகர்தற்குரிய இழிந்த சிற்றின்பங்களை அவாவி அலைதலாகிய இப் புல்லறிவாண்மையே என்பது உணர்த்துகின்றது.

பரப்பு - சஞ்சலமனத்தாற்படும் விரைவு; வேகம் என்பதும் அது. அமைதல்-அடங்குதல். மனத்தின் வேகமாகிய விரைவு அடங்கப்பெற்ற நல்லுயிர்கட்கே திருவருளின் இயல்பு இனிது புலனாகும் என்பார், பரப்பு அமைந்து கேண்மின் என்றார். வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க (சிவபுராணம்) எனவும், பப்பற வீட்டிருந்துணரும் நின்னடியார், பந்தனை வந்தறுத்தார் (திருப்பள்ளியெழுச்சி) எனவும் வரும் திருவாசகத்தொடர்கள், மனத்தின் விரைவு அடங்கிய உள்ளமுடையார்க்கே திருவருள் இனிது புலனாகும் என்னும் உண்மையினைப் புலப்படுத்துதல் காணலாம். இது என்றது, திருவருளை நாடாது சிற்றின்பங்களேயே நாடித்திரிதற்குக் காரணமாய் உயிர்களிடத்தே யமைந்த இப்புல்லறிவாண்மையினை. பாற் கலன்-பாலுள்ள பாண்டம். பூசை-பூஞை; பூனை. கரப்பு-எலி.

உறியிற் பாலிருக்கிற பாண்டத்தின்மேல் ஏறியமர்ந்த பூனையானது, தனக்கு ஆதாரமாயிருந்த பாண்டத்திலுள்ள இனியபாலைப் பருகிமகிழ எண்ணாமல், தன் கண்ணெதிரே கூரையின்கண்ணே ஒடும் எலியைத் தின்னவிரும்பித் தாவிப் பாயுந் தன்மைபோல, திருவருளிடமாக வாழும் உயிர்களும் அதனால் வரும் அருளாரமுதத்தைப்பருகி மகிழ எண்ணாமல் ஐம்பொறிகளால் ஈர்க்கப்பட்டு இழிந்தபோகங்களை விரும்பி இருமையின்பங்களையும் இழப்பனவாயின. உயிர்கள் இவ்வாறு,