பக்கம்:திருவருட் பயன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9% முதல்வன்’ என இரட்டுற மொழிதலாற் பொருள் கூறுதலும் பொருந்தும். விளிவின்று இருள்நிறமுந்நீர் வளைஇய வுலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும் ’’ (திருமுருகாற்றுப்படை-292-294) எனவரும் நக்கீரர் வாய்மொழியும், "இருண்ட நிறத்தை யுடைய கடல்சூழ்ந்த உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி, சீரிய பிற ராற் பெறுதற்கரிய வீடுபேற்றினேத் தருவன்’ என வரும் நச்சினுர்க்கினியர் உரையும், "தம்மைப்போலத் தம்மடியார்க்கும் இன்பளிப்பவர்” என வரும் ஆளுடையபிள்ளையார் அருளிச்செயலும் இங்குக் கூர்ந்துணரத்தக்கனவாகும். மேற்குறித்த தேவாரத் தொட ரில் இறைவனுக்குரியதாகக் குறிக்கப்பட்ட 'இன்பு என்றது, உயிர்கட்குரிய நுகர்ச்சியாகிய இன்பத்தினேக் குறியாது ஈத்துவத்தலாகிய இன்பத்தினேக் குறித்ததாகும். இறைவன், ஆசிரியத்திருமேனி தாங்கிக் கட்புலனுக எழுந்தருளிய நிலயிலும் அம்முதல்வனே உலகத்தார் அறியா திருத்தல் எவ்வாறு என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்து வதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 44. பொய்யிருண்ட சிங்தைப் பொறியிலார் போதமாம் மெய்யிரண்டுங் காளுர் மிக. இ-ள் : கிலேயாத காய வாழ்க்கையினையும், ஆணவ மலத்தால் மறைந்த வுணர்வினையும் உடையாய், ஞான மென்னுஞ் செல்வத்தினேயும் எய்துதல் இல்லாதார், அறிவு