பக்கம்:திருவருட் பயன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 இ_ள்: எல்லா இன்பங்களிலும் இனிமையுடைத் தென்று சிறப்பித்துச்சொல்லப்படும் பேரின்பமாவது ஒருவற்கு அன்பென்பது இப்பொழுதுண்டாயின் இப் பொழுதேயுளதாம்; அது மிக்க அன்பினது கிலேயே தனக்கு கிலேயாகவுடையது ஆகலான் என்க. இன்பு என்ற பொதுமையால் அமிர்த துகர்ச்சி முதலாயினவெல்லாம் அடங்கும். இதல்ை, அன்புடையார்க்கு அப்பேரின்பம் எளிதின் எய்திம் என்பது கூறப்பட்டது. விளக்கம்: இறைவன்பால் மெய்யன் புடையோர் இப் பிறப்பிலேயே வீடுபேற்றின்பத்தை அடைந்தின்புறுவர் என்பது உணர்த்துகின்றது. (அன்பு) இன்றுண்டேல்; இன்பில் இனிதென்றல் இன்று உண்டாம்; அன்பு நிலேயே அது ஆகலான் - என இபைத் துரைக்க, இன்புண்டேல் இன்புண்டாம் என்ற பாடம் உரைக்குப் பொருந்தவில்லே. இன்பில் இனிது என்றல்-இன்பங்கள் எல்லாவற்றினும் இனிமையுடைத்தெனச் சிறப்பிக்கப்படும் பேரின்பம். சிவ பரம்பொருளேயடைந்தின்புறுதலாகிய பேரின்பம் உயிர்களால் நுகரப்படும் எல்லாவின்பங்களினும் மிக்கதாய் இனிமை யுடைத்தென்பதும் அதனே இம்மையிலே பெறுதற்குச் சாதனம் மெய்யன்பே என்பதும், "கனியினுங் கட்டி பட்ட கரும்பினும் பனிமலர்க் குழற் பாவைநல் லாரினும் தனிமுடி கவித் தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க்கிடைமருதனே' (5-4-10) என ஆளுடைய அரசரும்,