பக்கம்:திருவருட் பயன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 எனவரும் சிவப்பிரகாசச் செய்யுட்பொருளேத் தொகுத்துரைக் கும் முறை யி லமைந்திருத்தல் அறிந்தின்புறற்குரியது. சிவபரம்பொருளே அடைந்தவர்கள் அம்முதல்வன்போல் ஐந்தொழிலேயும் செய்வார்களோ? என ஐயுற்ற மானுக்கர்க்கு ஐயமகற்றுவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 92. ஐந்தொழிலும் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர் வெந்தொழிலும் மேவார் மிக. இ-ள்: பரமசிவனல் செய்யப்படும் படைப்பு, கிலே, ஈறு, மறைப்பு, அருள் என்னும் ஐக்க தொழில்களையும் ஒருங்கே செய்தலும், அயன், மால், உருத்திான் மகேசன், சதாசிவன் என்னும் இவரில் ஒருவற்கும் ஒரே ஒரு தொழிலைச் செய்தலும் மாயா போகத்தினை அருந்தும் பிறப் பிற்கு ஏதுவாய வெய்ய தொழிலினைச் செய்தலும் சிறிதும் பொருந்தார் அவர். 'அசஞ்சலாய் அகண்டமாய் ஒழிவற நிறைந்த ஞான வடிவினராய் கின்றும், பரமானந்தத்தின அனுபவித்திருக்கும் ஒன் நிற்குமே உரியார் என்பது கருத்து. மிக என்பது குறிப்பு மொழியாய்ச் சிறிதும் என்னும் பொருள் விளங்க கின்றது. 'உயிர்தாலும் சிவானுபவம் ஒன்றினுக்கு முரித்தே, (சிக்கியார் சுபக்கம் 319) என்றருளிச் செய்தவாறு காண்க. இதல்ை, அவர் மற்ருெரு தொழிற்கும் உரியல்லர் என்பது கூறப்பட்டது. விளக்கம் தற்சேட்டைகெட நிற்பதே சிவாநுபவம் என் பது உணர்த்துகின்றது