பக்கம்:திருவருட் பயன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஐந்தொழில்: இறைவனுக்கே உரிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்பன. காரணர்களாவார்: அயன், மால், உருத்திரன். மகேசன், சதாசிவன் எனப் படைப்பு முதலிய ஐந்தொழில்களுக்கு முறையே கருத்தாக்களாக விளங்குவோர். போகம் நுகர் வெந்தொழில். சுவர்க்காதி போகங்களே விரும்பி நுகர்தலாகிய செயல். மிகமேவார்-சிறிதும் பொருந்தார். தத்துவங்களும் தத்துவ கருத்தாக்களும் நீங்கிய நிலையே முத்திநிலையாம் என்பது. பாரனவும் புலனந்தக் கரணம் ஒன்றும் படராமே நடுநாடி பயிலும் நாதம் காரண பங்கயன் முதலாம் ஐவர் வாழ்வும் கழியும் நெறி வழிபடவும் கருதி மேலேப் பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிவு நோக்கி ' (65) எனவரும் திருத்தொண்டர் புராண சாரத்தாலும், 'ஆட்டுத்தேவர்தம் விதிஒழித்தன்யால் ஜயனே என்றுன் அருள் வழி இருப்பேன்’ (திருவாசகம்-402) எனவும் “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' (కః 6} எனவும் வரும் திருவாதவூரடிகள் வாய்மொழியாலும் இனிது புலனும். ஆன்மா தன்செயலற நிற்பதே சிவானுபவமாம் என்பது, 'தன்னே மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” (6-25-7) என வரும் திருத்தாண்டகத்தாலும்,