பக்கம்:திருவருட் பயன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 99. மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க் கம்மையும் இம்மையே யாம். . இ~ள்: இம்மை அம்மை மறுமை யென்னும் மூவகைப் பயனயுந் தரும் வினைகள் யாவும் தொடா. தம்மேலாய அறிவினையுடையார்க்கு உடம்பிறந்தெய்தம் இன்பமும் அதனேடு கூடிநிற்கவேயுளதாம் ஆகலான் என்க. இம்மை-இப்பிறப்பு. அம்மை-மேலுலகினையடைதல், மறுமை-மறித்துவரும் பிறப்பு. உடம்பு இறந்த காலத்து நிலை வேறுபடுதல் இன்மை நோக்கி அம்மையும் இம்மையே யாம் என்று அருளிச்செய்தார். - இதனல், அவர்க்குச் சிறிதும் வினேத்தொடர்பு இன்று என்பது வலியுறுத்தப்பட்டது. விளக்கம் : சிவஞானச் செல்வராகிய பெரியோர்கள், இப்பிறவியிலேயே வினேயொழிந்து விடுபேற்றின்பத்தின நுகர்வார்கள் என்பது உணர்த்துகின்றது. மூதறிவார்க்கு மும்மைதரும் வினேகள் மூளாவாம்; இம் மையே அம்மையும் ஆம் என இயையும். மூதறிவார்-மேலா கிய சிவஞானத்தைப் பெற்ற சிவஞானிகள். மூளுதல்-மீண்டும் கிளர்ந்தெழுதல். இப்பிறப்பிலேயே மேலாகிய விடுபேற் றின்பத்தினை அடைந்து இன்புறுவர் என்பார், இம்மையே அம்மையும் ஆம் என்றர். இம்மை-இப்பிறப்பு. அம்மைமேலாகிய வீடுபேறு. மும்மைதரும் வினைகள் என்பதற்கு, மன வாக்குக் காயங்களாகிய முக்கரணங்களாலும் செய்யப் படும்வினைகள் எனப்பொருள்கொள்வர் சிந்தனையுரையாசிரி யர். இறைவன் திருவருளால் இப்பிறப்பிலேயே வினைத் தொடர்பறுத்து உய்திபெறலாம் என்பது,