பக்கம்:திருவருட் பயன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 “ இம்மை அம்மை எனவிரண்டும் இவை மெய்ம்மை தானறியாது விளம்புவர் மெய்மையால் நினைவார்கள் தம் வல்வினே வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே? (5.26-4) எனவரும் திருக்குறுந்தொகையால் இனிது விளங்கும். சிவன்முத்தராயிஞர்க்கு ஏனய உயிர்களைப்பற்றிய கவலே யுண்டோ என வினவுவாரை நோக்கி அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 100. கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை வெள்ளத் தலைவர் மிக, இ-ள் யான் எனது என்னும் வஞ்சத் தலைமையின யுடைய ஆன்மாக்கள்படுத் துன்பத்தின எண்ணித் தம்மிடத் தெழுந்த கருணையாகிய கடலினுள்ளே மிகவும் அலைதலைச் செய்வர் என்க. . அலைதல் - இரக்கத்தால் தளர்தல். இதல்ை - அவர், விட்டினை விரும்பாத உயிர்கள்மாட்டு இறைவன்போல் அருளுடையாதல் கூறப்பட்டது. விளக்கம் : இப்பிறப்பிலேயே முதல்வனே அணந்தோ ராகிய சீவன்முத்தர்கள் தம் முதல்வனேயொப்ப எல்லாவுயிர்க ளிடத்தும் அருளுடையராய்த் திகழ்வர் என்பது உணர்த்து கின்றது. - கள்ளத்தல்வர் என்பதற்கு யான் எனது என்னும் வஞ்சத்தலைமையினேயுடைய ஆன்மாக்கள்’ என நிரம்ப அழகிய தேசிகரும், இந்திரியங்களோடே கூடி நிற்கிற ஆன் மாக்கள் எனச் சிந்தனையுரையாசிரியரும் பொருள்கொள்வர்.