பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் - - 37.

அல்ல. நோக்கத் கருத்திற்கு உரமாகும் கருத்துக்களாகும். எவ்வாறெனில், பாவேந்தருக்குப் பிரமலோகம், இந்திர லோகம், சத்தியலோகம் என்பன எல்லாம் வெற்றுப் புழுகுகள். கண்ணன் பாவேந்தரின் ஏளனத்திற்கு உரியவன். பாரதம் பாவேந்தரின் கண்டனத்திற்கு உரியது. இவர்

'துரியனின் (துரியோதனின்) ஏற்றத்தைப் பாடுவேன்' என்று பாடியவர் -

பாவேந்தர் கருதிய புளுகுக்கருத்தை-ஏளனக்கருத்தைகண்டனக் கருத்தை ஏன் எடுத்துமொழிந்து பாடினார்?

'கல்கி ஆசிரியர் கல்கி' என்னும் கல்யாணி கிருட்டிண மூர்த்தி 'பாரதியார் உலக மாகவி அல்லர்’ என்று எழுதி னார். அதனை மறுக்கும் நோக்கக் கருத்தில் எழுந்த பாடல் களின் முதற்பாட்டே மேலே காட்டப்பட்டது.

இதனால் புரிவன யாவை?

தம் நோக்கக் கருத்தை உறுதிப்படுத்த,

தாம் உயர்த்த விரும்பிய சான்றோரின் கருத்துத் தழுவலுடன்,- -

தமக்கு விருப்பமில்லாதவற்றையும் எடுத்து மொழிந்

தார் என்பனவே உண்மை

இவை மூன்றும் பாவேந்தர் கருத்தோ-கொள்கையோ என்று கொள்ள முடியாது: கொள்ளக்கூடாது. நோக்கக் கருத்திற்கு உரம், ஊட்டுபவை. ..

இவை போன்றே திருவள்ளுவரும், பல செய்திகளையும் கருத்துக்களையும் எடுத்த கருத்தின் உறுதிப்பாட்டிற்காக